Biggboss Tamil 8: சொதப்பிய விஜய் சேதுபதி!.. அடங்காத போட்டியாளர்கள்.. 'கமலை கொண்டு வாங்க பாஸ்’..

by சிவா |
kamal vijay sethu
X

#image_title

Biggboss Tamil : பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 8வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த எழு வருடங்களாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் கமல்ஹாசன். இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஒரேயடியாக விலகி விட்டார். கமலை உள்ளே வைத்துக்கொண்டு விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரிடமும் பிக்பாஸ் டீல் பேசியதே இதற்கு காரணமாகும்.

இந்தியில் தொடர்ந்து 18வது ஆண்டாக நடிகர் சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவரிசையில் கமலும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பொன் முட்டையிடும் வாத்தாக இருந்த கமல்ஹாசனை தன்னுடைய பேராசையால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பறிகொடுத்து விட்டனர்.

இதையும் படிங்க: Lucky baskar: 10 நாட்களில் லக்கி பாஸ்கர் செய்த மெகா வசூல்!.. 100 கோடி கிளப்பில் இணையுமா?…

சரி அவருக்கு பதிலாக உள்ளே வந்த விஜய் சேதுபதி கமல் செய்தது போல சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வருகிறாரே என ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர். ஆனால் அதற்கு ஆயுள் குறைவு தான். இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி கறாராக இருந்து சொதப்பி வருகிறார்.

கமலிடம் போட்டியாளர்களுக்கு இருந்த பயம் விஜய் சேதுபதியிடம் இல்லை. இதை நேற்றைய நிகழ்ச்சியில் நன்றாக பார்க்க முடிந்தது. தீபக், விஜே விஷால், சத்யா என ஆண் போட்டியாளர்கள் விஜய் சேதுபதியை சொல்வதை காது கொடுத்து கேட்க மறுத்து விட்டனர். நேருக்கு நேராகவே அவர்கள் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Biggboss Tamil

இதற்கு போட்டியாளர்களை பேச விடாமல் ஆரம்பத்தில் இருந்து விஜய் சேதுபதி நடந்து கொண்ட விதமும் முக்கிய காரணமாகும். இதைப்பார்த்த ரசிகர்கள் 'கமல் ஐயா உங்க அருமை தெரியாம பேசிட்டோம். சீக்கிரம் வந்து சார்ஜ் எடுத்துக்கங்க' என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். என்றாலும் நிகழ்ச்சிக்கும் மீண்டும் கமல் உள்ளே வர வாய்ப்பில்லை. எனவே இப்போதைக்கு விஜய் சேதுபதிதான்.

வரும் காலங்களில் வேறு தொகுப்பாளர் நிகழ்ச்சிக்கு உள்ளே வருகிறாரா? என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் சுனிதா வாங்கிய ‘சம்பளம்’ இதுதான்!

Next Story