Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் சுனிதா வாங்கிய 'சம்பளம்' இதுதான்!
Biggboss Tamil 8: பிக்பாஸ் வீட்டில் நேற்று நடைபெற்ற எலிமினேஷனில் சற்று நன்றாகவே ஆடிக்கொண்டிருந்த சுனிதா வீட்டில் இருந்து வெளியேறி இருக்கிறார். சாச்சனா அல்லது ஆனந்தி வெளியேற வேண்டியது. முதல் நாளில் சாச்சனா பலியாடு ஆக்கப்பட்டார்.
அதோடு இளம் போட்டியாளர் என்பதால் வரும் நாட்களில் எதையாவது கொளுத்திப்போட்டு கண்டெண்ட் தருவார் என பிக்பாஸ் நினைக்கிறாராம். மறுபக்கம் ஆனந்தி ஆட்டோ பாம் போல எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்று தெரிகிறது. இதனால் தான் தங்களது சொந்த போட்டியாளரையே வெளியில் அனுப்பி வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Surya: தன்னை விட அதிகமா சம்பளம் வாங்கிய ஜோதிகா… கல்யாணம் பண்ணத் தயங்கிய சூர்யா… அடுத்து நடந்தது என்ன?
மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியில் சுனிதா உள்ளே வருவார் என தெரிகிறது. இந்தநிலையில் பிக்பாஸ் வீட்டில் சுனிதாவின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி நாளொன்றுக்கு ரூ.25 ஆயிரம் அவர் சம்பளமாக வாங்கி இருக்கிறார். மொத்தமாக 35 நாட்கள் உள்ளே இருந்த வகையில் ரூ.8 லட்சம் சுனிதாவிற்கு சம்பளமாக கிடைத்துள்ளது.
இதில் வரிக் கட்டியது போக மிச்சம் சில லட்சங்கள் அவரின் கைகளில் இருக்கும். மேலும் வைல்டு கார்டில் வரும்போதும் அவருக்கு சம்பளம் வழங்கப்படும். சுனிதா உள்ளே செல்லும்போது தன் தங்கையிடம் பிஆர் வொர்க் பார்க்கும்படி சொல்லி சென்றாராம். ஆனால் சுனிதா உள்ளே சென்ற கொஞ்ச நாட்களில் தங்கைக்கு உடல் நலமில்லாமல் போய் விட்டது. இதுவும் சுனிதா வாக்குகள் குறைவாக பெற்று வெளியேறுவதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Thalapathy 69: அதெல்லாம் முடியாது… விஜய்க்கே ‘விபூதி’ அடித்த நடிகை?..