Surya: தன்னை விட அதிகமா சம்பளம் வாங்கிய ஜோதிகா... கல்யாணம் பண்ணத் தயங்கிய சூர்யா... அடுத்து நடந்தது என்ன?

by sankaran v |   ( Updated:2024-11-11 02:20:48  )
surya jothika
X

surya jothika

தமிழ்சினிமா உலகில் சூர்யாவின் படங்கள் என்றாலே அதுல ஒரு வெரைட்டி இருக்கும். வித்தியாசமான கெட்டப்பில் கலக்குவார் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வந்துவிட்டது. கஜினி, பிதாமகன், ஏழாம் அறிவு என்ற இந்த வரிசையில் இப்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா.

Also read: Vijay Jyothika: ஜோதிகாவை இப்படியெல்லாம் கிண்டலடிச்சிருக்காரா விஜய்? சீக்ரெட்டை போட்டுடைத்த டான்ஸ் மாஸ்டர்

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யா நடித்த இந்தப் படம் மாஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரைலரில் சூர்யா 2 கெட்டப்புகளில் வந்து கலக்குகிறார்.

கங்குவா

Kanguva

Kanguva

சிறுத்தை சிவா இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படம் கங்குவா. இது 38 மொழிகளில் தயாராகி வரும் முதல் படம் இதுவாகத் தான் இருக்கும். இந்தப் படத்திற்கான புரொமோஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்தப் படம் வரும் 14ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கங்குவா படம் பீரியடு பிலிம் மாதிரி ஒரு காட்டுவாசி கெட்டப்பில் வருகிறார் சூர்யா. அதே நேரம் ஸ்மார்ட் லுக் சூர்யாவும் வருகிறார். எப்படி எடுத்துள்ளார்கள் என்பது படம் வந்தால் தான் தெரியும். படத்தில் சூர்யா, திஷா பதானி, பாபிதியோல், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜோதிகா சம்பளம்

இந்த நிலையில் சூர்யா பற்றிய ஒரு ஆச்சரியமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது காக்க காக்க படத்தில் சூர்யாவோட அதிகமாக ஜோதிகா தான் சம்பளம் வாங்கினாராம். அந்த நேரம் இருவருக்கும் காதல் வேறு.

surya jothika

surya jothika

கல்யாணம் வரை சென்று விட்டது. தன்னை விட அதிகமாக ஜோதிகா சம்பளம் வாங்குகிறாரே... லைஃப்ல எப்படி சமாளிப்பது? செட்டாகுமா என்றெல்லாம் எண்ணம் வரத்தானே செய்யும்? அது சூர்யாவுக்கும் வந்தது. அவர் இதுபற்றி என்ன சொல்கிறார்னு பாருங்க.

சூர்யா ஃபீலிங்

காக்க காக்க படத்தில் நடிக்கும்போது ஜோதிகாவிற்கு
என்னை விட 3 மடங்கு சம்பளம் அதிகம். அப்போ தான் என் வாழ்க்கையில் நான் எங்கு இருக்கிறேன் என்று தெரிந்தது. ஒருவர் என்னுடைய வாழ்க்கையில் கூட சேர்ந்து பயணிக்க தயாராக இருக்கும்போது அவருடைய பெற்றோர்களும் தயாராக இருக்கும்போது நான் என்ன சம்பாதிக்கிறேன்.

Also read: பிரம்மாண்டத்தின் உச்சம்.. வெளியான ‘கங்குவா’ பட டிரெய்லர்! ஒரே கூஸ் பம்ப்தான்

அவங்க என்ன சம்பாதிக்கிறாங்க. எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று உணர்ந்தேன். அவங்களோட நிறைய சம்பாதித்து அவங்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். அதெல்லாம் தானாகவே நடந்தது என்கிறார் சூர்யா.

Next Story