Amaran: அமரன் திரைப்படத்தில் பிரச்னை இருப்பதாக குற்றச்சாட்டுகள் வலுத்து வரும் நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி வலுவாக பதில்களை கொடுத்து அசர வைத்து இருக்கிறார்.
அமரன் திரைப்படம்: சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்த திரைப்படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் திரைப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயன், அவரது மனைவி இந்து ரபேக்கா வர்கீஸாக சாய் பல்லவி நடித்திருந்தனர். படம் தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.
இதையும் படிங்க: OTT Release: தீபாவளி ரிலீஸ் படங்களெல்லாம் எந்த ஓடிடியில் ரிலீஸ் தெரியுமா?!.. வாங்க பார்ப்போம்!…
முதல்முறையாக சிவகார்த்திகேயனின் திரைப்படம் 200 கோடி வசூலை தாண்டி இன்னமும் வெற்றி நடை போட்டு வருகிறது. இருந்தும் இப்படத்திற்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ராணுவ அதிகாரிகளின் வாழ்க்கையை தவறாக சித்தரிப்பதாக கருத்துக்களையும் தெரிவித்தனர்.
ராஜ்குமார் பெரியசாமியின் விளக்கம்: இது குறித்து ராஜ்குமார் பெரியசாமியிடம் கேள்வி எழுப்பியபோது, இத்திரைப்படம் முழுக்க முழுக்க பாதுகாப்பு துறை அமைச்சகம் மற்றும் ஏடிஜிபிஐ ஒப்புதல் கிடைத்த பின்னரே படமாக உருவாக்கப்பட்டது. இப்படத்தில் சென்சார் அக்டோபர் மாத கடைசியில் தான் நடந்து முடிந்தது.
ஆனால் அக்டோபர் 1ஆம் தேதியே பாதுகாப்பு அமைச்சகத்தில் ஏடிஜிபிஐ இந்த படத்தை பார்த்து அவர்களுடைய அறிவுரைகளையும், கருத்துகளையும் முன்வைத்த பின்னரே இப்படம் அடுத்த கட்டத்துக்கு முன்னேறியது. ராணுவ சம்பந்தப்பட்ட படங்கள் எடுத்தால் அவர்கள் பார்த்து அவர்களுடைய ஒப்புதல்களை கொடுத்தால் மட்டுமே படம் வெளியாகும்.
இதையும் படிங்க: Kanguva: கங்குவா அட்வான்ஸ் புக்கிங்குக்கு வந்த சிக்கல்!. எப்பா 2 ஆயிரம் கோடி பாத்து பண்ணுங்கப்பா!..
அவர்கள் கொடுத்த சான்றிதழ் எங்களிடம் உள்ளது. யாரோ பேட்டி கொடுக்கிறார்கள் என்றால் அவர்களுடைய கருத்துக்களுக்கு எல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது. அவர்கள் தங்களுடைய கருத்துக்கள் சரியாக இருக்கிறதா என்பதை சரி பார்த்து கொண்டே பேச வேண்டும்.
ஒவ்வொரு ராணுவ குழுவிற்கும் ஒவ்வொரு முழக்கங்கள் இருக்கும். அதை நான் அப்படியே தான் எடுக்க முடியும். மாற்றி எடுத்தால் தான் நான் செய்வது தவறாக இருக்கும். எனக்கும் அரசியல் பார்வை இதுதான். ஆனால் அதை என்னுடைய படங்களில் திணிக்க கூடாது என்பதில் இயக்குனராக நான் தெளிவாக இருந்தேன் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
