Vanangaan: யாருக்கும் வணங்குறதா இல்ல! ஒரு கை பாத்துருவோம்.. வணங்கானுக்காக பாலா எடுக்கும் தில்லான முடிவு

Published on: November 12, 2024
vanangaan
---Advertisement---

Vanangaan: பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடிப்பில் தயாராகியிருக்கும் திரைப்படம் வணங்கான். படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்திரக்கனி உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி தன்னுடைய வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக தயாரித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்புதான் நடந்து முடிந்தது.

சூர்யா விலகல்: ஆரம்பத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. சூர்யாவை வைத்து சில நாள்கள் பாலா படப்பிடிப்பையும் நடத்தினார். அதுவும் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்து ஆரம்பத்தில் 10 கோடி வரை சூர்யா செலவு செய்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் சூர்யாவை பாலா மிகவும் டார்ச்சர் செய்வதாகவும் அவர்களுக்குள் சில பல கருத்து வேறுபாடு ஏற்படவே சூர்யா இந்தப் படத்தில் இருந்து விலகினார் என்றும் சொல்லப்பட்டது.

இதையும் படிங்க: Thuppakki: துப்பாக்கி படத்தில் விஜயே இல்லை!.. அமரன் பட இயக்குனர் சொல்றத கேளுங்க!..

அதோடு தயாரிப்பிலிருந்தும் விலகி கொண்டார் சூர்யா. அதன் பிறகுதான் வணங்கான் படத்தில் அருண்விஜய் நடிக்க வந்தார். கடலோர பகுதிகளில் தான் முழுவதும் படப்பிடிப்பை நடத்தினார் பாலா. இந்தப் படத்திற்காக அருண் விஜய் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார் என்பது கண்கூடாகவே தெரிகிறது, படமும் நல்ல படியாக வந்திருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

ரிலீஸில் சிக்கல்: படம் நவம்பர் மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அது சம்பந்தமான வேலைகளில்தான் படக்குழு இறங்கியது. ஆனால் அதன் ரிலீஸில் இழுபறி இருந்து கொண்டேதான் இருந்தது. இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி பற்றி சமீபத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பொங்கல் அன்று ராம்சரண் நடிக்கும் கேம் சேஞ்சர் படம் ரிலீஸாக உள்ளது அனைவருக்கும் தெரியும்.

vanag
vanag

ரசிகர்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட படமாக கேம் சேஞ்சர் படம் இருக்கிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருப்பதால் படமும் பிரம்மாண்டமாக தயராகியிருக்கிறது. அதனால் அந்த பட ரிலீஸ் நேரத்தில் வேறு எந்த படமும் ரிலீஸ் ஆக தயங்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அதற்காக சில படங்கள் ரிலீஸ் தேதியையே தள்ளி வைத்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: Ilayaraja: நீங்க பண்றது சரியில்ல!.. இளையராஜாவிடம் கோபப்பட்ட கமல்!.. விஷயம் இதுதான்!…

ஆனால் இதுதான் சமயம் என பாலா இந்த தேதியில் வணங்கானை கொண்டு வர முடிவெடுத்திருக்கிறாராம். கேம் சேஞ்சர் வேறு ஒரு ஜானரில் உருவாக்கப்பட்ட படம். வணங்கான் படம் வேறொரு ஜானர். அதுமட்டுமில்லாமல் பாலா மற்றும் அருண்விஜய்க்கு தமிழ் நாட்டில் ஒரு தனி மார்கெட் இருப்பதால் தமிழ் நாட்டில் ஓரளவு வணங்கான் படத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.