Kanguva: மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடி… கங்குவா படத்திற்கு இடிமேல் இடி…!

Published on: November 12, 2024
Kanguva
---Advertisement---

சூர்யா நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் கங்குவா. ஞானவேல் ராஜா பெருமையுடன் வழங்கும் இந்தப் படம் வரும் 14ம் தேதி உலகெங்கும் ரிலீஸாகிறது.

ஆரம்பத்தில் இருந்தே படத்திற்குப் பிரச்சனை வந்த வண்ணம் உள்ளன. வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியில் கங்குவாவும் ரிலீஸ்னு சொன்னாங்க. அக்டோபர் 10 தான் அது. ஆனால் அதை ரஜினிக்காகத் தள்ளி வைத்தார்கள்.

கங்குவா ரிலீஸ்

Also read: Kanguava: சொந்த ஊர்ல பிரச்சினை முடிஞ்சு பக்கத்து ஊர்ல பஞ்சாயத்தா? எவ்வளவுதான் தாங்குவாரு ‘கங்குவா’?

அந்தத் தேதி நவம்பர் 14 என்றும் சிங்கம் சிங்கிளா களம் இறங்குனா தான் நல்லது என்றும் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. அதன்படி கங்குவா ரிலீஸ் என்பதில் உற்சாகமாக இருந்தனர். ஆனால் தீபாவளிக்கு வெளியான அமரன் படம் சூப்பர் டூப்பர் ஹிட் என்பதாலும் படத்தை பல தியேட்டர்களில் தூக்க முடியாது என்றும் சொல்லிவிட்டனர்.

75:25 ஷேரிங் விவகாரம்

அதுமட்டும் அல்லாமல் 75:25 ஷேரிங் விவகாரத்தில் விநியோகஸ்தர் தரப்பு தயாரிப்பாளர் தரப்புடன் உடன்படவில்லை என்பதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல். அதன்பிறகு பார்த்தால் சிறப்புக்காட்சிக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. வெளிமாநிலங்களில் கர்நாடகா, ஆந்திராவில் அதிகமான விலைக்கு டிக்கெட் விற்பதால் அது ரத்து செய்யப்பட்டது.

கிடுக்கிப்பிடி

தமிழகத்தில் கூட துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் சூர்யா பேசியதால் சிறப்புக்காட்சி கொடுக்கப்பட்டதாம். அந்தவகையில் இப்போது ஒரு கிடுக்கிப்பிடியை உயர்நீதிமன்றம் போட்டுள்ளது. அது என்னன்னு பார்க்கலாமா…

ரூ.1.60 கோடி

கங்குவா படத்தின் ரிலீஸ் விவகாரத்தில் ப்யூல் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ.1.60 கோடியை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் படத்தை வெளியிடக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு போட்டுள்ளது.

Kanguva
Kanguva

பெரும் எதிர்பார்ப்பு

Also read: Samantha: எனக்கு இன்னும் ’அந்த’ ஆசை இருக்கு… சமந்தாவின் பேச்சால் அதிர்ந்த ரசிகர்கள்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துள்ளார். திஷாபதானி ஹீரோயினாக நடித்துள்ளார். பாபிதியோல் படத்தில் முரட்டுவில்லனாக வருகிறார். டிரைலரும் மிரட்டி விட்டது. தேவிஸ்ரீபிரசாத் இசை மாஸ். இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது.

 

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.