Connect with us
Attakasam

Cinema News

20 ஆண்டுகளைக் கடந்தும் அட்டகாசமான அஜீத் படம்… இப்போ பார்த்தாலும் ‘தல’ கெத்து தான்..!

2004ல் ‘தல’ அஜீத் இரட்டை வேடத்தில் கலக்கலாக நடித்த படம் அட்டகாசம். சரண் இயக்கியுள்ளார். அவருடன் இணைந்து பூஜா, சுஜாதா, ரமேஷ் கண்ணா, கருணாஸ், இளவரசு, வையாபுரி உள்பட பலரும் நடித்துள்ளனர்.

20 ஆண்டுகள்

பரத்வாஜ் இசையில் பாடல்கள் எல்லாமே அட்டகாசம் தான். எல்லாமே ஆட்டம் போட வைக்கும் ரகங்கள். இந்தப் படம் 2004 தீபாவளிக்கு அதாவது நவம்பர் 12ம் தேதி இதே நாளில் வந்தது. இன்றுடன் 20 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஆடல் பாடல்

Also read: Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…

தெற்கு சீமையிலே, பொள்ளாச்சி இளநீரே, ‘நச்’சென்று இச்சொன்று, உனக்கென்ன, தல போல வருமா, அட்டகாசம் ஆகிய பாடல்கள் உள்ளன. பொதுவாக தல படம் என்றாலே பெரும்பாலான மேடைக்கலைஞர்கள் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் இந்தப் படத்தில் இருந்து தான் பாடலைத் தேர்ந்தெடுப்பார்கள்.

அதிரடி ஆட்டம்

Ajith

Ajith

அதிலும் ‘தெற்குச்சீமையிலே என்னைப் பத்திக் கேளு’ என்ற பாடல் அஜீத்தை மாதிரியே மேக்கப் போட்டு அதிரடியாக ஆட்டம் போட்டு அசத்திவிடுவார்கள். பார்க்கும் ரசிகர்கள் எல்லாம் கரகோஷம் எழுப்பி உற்சாகத்தில் மிதப்பர். இந்தப் பாடல் தான் அஜீத்தின் பாடல்களில் இன்று வரை டிரேடு மார்க்காக உள்ளது என்றே சொல்லலாம்.

ஸ்மார்ட் லுக்

அஜீத்தின் நடை அழகு பாடலில் செம மாஸாக இருக்கும். ஒரு தாதாவாக எப்படி ஸ்மார்ட் லுக்குடன் வரலாம் என்பது அவருக்கு மட்டும் தான் அழகு போலும். அந்த வகையில் அஜீத்தின் அல்டிமேட் நடிப்பு சும்மா மாஸாக இருக்கும்.

இரு வேடங்களில்

இதற்கு முன் அஜீத், சரண் காம்போவில் காதல் மன்னன், அமர்க்களம் என இரு சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் அட்டகாசமும் இணைந்து ஹாட்ரிக் வெற்றியைத் தந்தது.

Also read: Kanguva: ஒரே ஒரு போன் கால்!.. கங்குவா சிறப்பு காட்சிக்கு பர்மிஷன் வாங்கிய சூர்யா!.. செம மேட்டரு!..

இந்தப் படத்திற்குப் பிறகு அஜீத்தின் மார்க்கெட் வேற லெவலுக்குப் போனது என்றே சொல்லலாம். படத்தில் முற்றிலும் மாறுபட்ட இரு வேடங்களில் நடித்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருப்பார் அஜீத்.

 

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top