Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் தனக்கான ஒரு தனி இடம் பிடித்தவர் .எல்லாருக்கும் எல்லாம் என்பது விஜயகாந்திற்கு மிகவும் பொருந்தும். தனக்கு என்ன மாதிரியான வசதிகள் கொடுக்கப்படுகிறதோ அதுதான் தன் யுனிட்டில் இருக்கும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் படைத்தவர் விஜயகாந்த்.
ஒரே வகையான உணவு: அதற்கு உதாரணமாக அவர் படப்பிடிப்பில் விஜயகாந்துக்கு என்ன மாதிரியான உணவுகள் வழங்கப்படுகிறதோ அதுதான் அங்கு வேலை செய்யும் அனைத்து டெக்னீசியன்களுக்கும் கிடைக்க வழிவகை செய்தார். அது கடைசி வரை தொடர்ந்து கொண்டே இருந்தது. பறப்பன, நீந்துவன, ஊர்வன, நடப்பன என எதுவாக இருந்தாலும் எல்லாருக்கும் அது கிடைக்க ஏற்பாடு செய்தார்.
இதையும் படிங்க: Shariq: என் pant-அ பிடிச்சு! முழு நேர வேலையாவே இததான் பண்றாரு போல.. குசும்பு பிடிச்ச ஷாரிக்
சினிமாவில் எப்படி ஒரு சிறந்த நடிகராக இருந்தாரோ அதை போல அரசியலிலும் ஒரு நல்ல தலைவராக இருந்தார் விஜயகாந்த். யாருமே எதிர்க்க முடியாத திமுக, அதிமுக என இந்த இரு கட்சிகளையும் ஆட்டம் காண வைத்தார் விஜயகாந்த். அரசியலுக்குள் நுழைந்த குறுகிய காலத்தில் ஒரு எதிர்க்கட்சி தலைவராக உட்கார்ந்தார். அது அனைவராலும் ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.
கெத்து காட்டிய கேப்டன்: செல்வி ஜெயலலிதாவிற்கு எதிர் இருக்கையில் அமர்ந்து கெத்தாக அவர் பேசிய வசனங்கள் இன்றுவரை மக்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுகவில் பிரச்சார பேச்சாளராக இருந்தவர் நடிகை விந்தியா. ஜெயலலிதாவால் மிகவும் ஈர்க்கப்பட்டு அதிமுகவில் இணைந்தார் விந்தியா. இவர் விஜயகாந்துக்கு எதிராக சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: Nepoleon: நெப்போலியன் மகன் தனுஷுக்கு மனைவி கொடுத்த முதல் பரிசு!… செம லவ்வா இருக்கே!…
ஆனால் அரசியலில் கொள்கைகளில் எங்களுக்குள் முரண்பாடு இருந்தாலும் சினிமாவில் என்னுடைய ஃபேவரைட்டான நடிகர் என்றால் அது விஜயகாந்த்தான் என ஒரு பேட்டியில் கூறினார் விந்தியா. ஏழை பணக்காரன், இயக்குனர் , தயாரிப்பாளர் என எந்த வேறுபாடும் பார்க்காமல் சகஜமாக பழகக் கூடியவர். மாசத்துல பாதி நாள் விஜயகாந்த் ராயப்பேட்டை மருத்துவமனையில் தான் இருப்பார். ஏனெனில் அங்கு சிகிச்சைக்காக பல பேருக்கு உதவிகள் செய்வதே விஜயகாந்த்தான் என விந்தியா கூறினார்.
