Cinema News
சாய்பல்லவியின் கிரஷ் யாரு தெரியுமா? அட இவ்ளோ ஓப்பனா சொல்றாங்க.. மனைவிக்கு தெரிஞ்சா?
SaiPallavi: அமரன் திரைப்படத்திற்கு பிறகு சாய் பல்லவிக்கு தமிழ் நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகிவிட்டனர். கிட்டத்தட்ட தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாகவே சாய் பல்லவி மாறிவிட்டார். அந்த அளவுக்கு அமரன் படம் அவரை ரசிகர்களிடம் பெரிய அளவில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. இதற்கு முன் சூர்யாவுடன் இணைந்து NGK படத்தில் நடித்திருந்தார் சாய்பல்லவி.
ஆரம்பத்தில் புஷ்ஷான சாய்பல்லவி:அந்தப் படத்தில் கூட இந்த அளவு ரீச் ஆகவில்லை. அதைப்போல தனுஷின் மாரி படத்திலும் நடித்திருந்தார். அதிலும் பெரிய அளவில் இவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் அமரன் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் ஒரு ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித்து இன்றளவும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டார் .
இதையும் படிங்க: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…
ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவும் அமரன் படத்திற்கு பிறகு இப்படி ஒரு மனைவி நமக்கும் கிடைக்க மாட்டாரா என்ற அளவுக்கு ஒவ்வொரு ஆணையும் யோசிக்க வைத்திருக்கிறார் சாய்பல்லவி .ஒரு நல்ல காதலியாக அன்பான மனைவியாக அந்தப் படத்தில் அவர் வெளிப்படுத்திய விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
ஆல் டைம் ஃபேவரைட்: இந்த நிலையில் சாய் பல்லவியின் கிரஷ் யார் என்பது தற்போது வெளியாகியுள்ளது. அது அவரே ஒரு பேட்டியில் கூறி இருப்பது தான் ஸ்பெஷல். அதாவது அவருடைய ஆல் டைம் கிரஷ் என்றால் அது சூர்யா தான் என கூறியிருக்கிறார் சாய் பல்லவி. NGK படத்தில் நடிக்கும் பொழுது சீரியஸான காட்சிகள் எல்லாம் வரும் இந்த சீரியஸான காட்சிகளில் கூட அவருடைய கண்கள் மிகவும் சாந்தமாக இருக்கிறது என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது. அந்த அளவுக்கு அவருடைய கண்கள் மிகவும் அழகாக இருக்கும் என கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: சொல்ல முடியாது!… விஜய் படத்தின் பார்ட் 2-ல எஸ்கே நடிக்கவும் வாய்ப்பிருக்கு?!… வேற லெவல்!…
மேலும் அந்த படத்தில் நடிக்கும் பொழுது அந்த படத்தின் இயக்குனர் எந்த ஒரு டேக்கையும் ஓகே சொல்லவே மாட்டாராம். இது சாய்பல்லவிக்கு ஒரு பெரிய மன உளைச்சலை தந்திருக்கிறது. ஏனெனில் நாம் நல்லா நடிக்கிறோமா இல்லையா என்று கூட தெரியாமல் இந்த படத்தில் இருக்கிறோமே. பேசாமல் படத்தை விட்டு விலகி விடுவோம் என்றெல்லாம் நினைத்து நேரடியாக அந்த இயக்குனருக்கு போன் செய்து பேசினாராம். அதிலிருந்து மறுநாள் அவர் நடிக்கும் ஒவ்வொரு டேக்கையும் ஓகே செய்திருக்கிறார் இயக்குனர்.