நானும் இளையராஜாவும் ஒன்னா குடிப்போம்.. ஆனா இப்படி மாறுவாருனு நினைக்கல! ரஜினியின் ஃபிளாஷ்பேக்

Published on: November 14, 2024
ilaiyaraj
---Advertisement---

தமிழ் சினிமாவில் இன்று ஒரு சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். தமிழ் மட்டுமல்ல மற்ற மொழி சினிமாக்களிலும் இவருக்கு என ஒரு ஃபேன்ஸ் ஃபாலோயர்ஸ் இருக்கத்தான் செய்கிறார்கள். பிக் பி என்று அமிதாப்பச்சனை சொல்வார்கள். ஆனால் அவரையும் விட ரஜினிக்கு தான் அதிக அளவு மரியாதையும் மதிப்பும் இருப்பதாகவே கருதப்படுகிறது.

அந்த அளவுக்கு இந்திய அளவில் ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகராக மாறி இருக்கிறார் ரஜினிகாந்த். இவ்வளவு உச்சத்தை அடைந்தாலும் பார்ப்பதற்கு எளிமையாகவும் பழகுவதில் சகஜமாகவும் இருப்பதுதான் அவருடைய பிளஸ். அரசியலுக்கு வருகிறேன் என சொல்லி கடைசியில் அரசியலுக்கு வரவும் இல்லை. ஒரு நடிகராகவே மக்களை மகிழ்வித்து விட்டு போய்விடுகிறேன் என அரசியலை விட்டு சினிமாவில் இப்போது நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இதையும் படிங்க: கடைசி நேரத்தில் பின் வாங்கிய குட்டி சூர்யாவின் படம்!… அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?!…

இவருடைய ஆரம்ப கால வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும் பொழுது ஏகப்பட்ட விஷயங்களை நினைவு கூற முடியும் .இவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே இல்லை என்று இவரே ஒரு பழைய பேட்டியில் கூறியிருக்கிறார். அதனாலயே இவருக்கும் பாலச்சந்தருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் செய்திகள் இருக்கின்றன.

படப்பிடிப்பிற்கு வரும்போது சில சமயங்களில் குடித்துவிட்டு தான் வருவார் ரஜினி என்ற ஒரு செய்தியும் இருக்கின்றது. ஒரு கட்டத்தில் இவருடைய உடல் நிலை மிகவும் மோசம் அடைந்து தீவிர நிலைக்கு போய் பிழைப்பாரா மாட்டாரா என்ற ஒரு இக்கட்டான நிலையிலும் இருந்திருக்கிறார் ரஜினி, அப்போது இவருடன் கூட இருந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. இதுவும் நாம் அறிந்த செய்தி தான் .

இப்படி குடியால் அவருடைய வாழ்க்கையையே இழக்க நேர்ந்தவர் ரஜினிகாந்த். இந்த நிலையில் அவருடைய மலரும் நினைவுகளான ஒரு சம்பவம் இன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. இது ரஜினி ஒரு பழைய பேட்டியில் கூறியிருந்தது. இளையராஜாவை எப்போதும் சாமி என்றே தான் அழைப்பார் ரஜினிகாந்த். எந்த சமயத்தில் இருந்து சாமி என்று அழைத்தார் என்பதை பற்றி கூறியிருக்கிறார்.

rajini
rajini

இதையும் படிங்க: கங்குவா படத்திற்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஐகோர்ட்!… ஆனா ஒரு கண்டிஷன்?!…

அதாவது சில சமயங்களில் இளையராஜாவும் ரஜினியும் தான் ஒன்றாக குடிப்பார்களாம். ஒரு  நாள் எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு சுத்தமாகிவிட்டாராம் இளையராஜா.  ஒரு ஆன்மீகவாதியாக மாறி ரஜினி முன் வந்து நின்று இருக்கிறார். அதை பார்த்ததும் ரஜினிக்கு ஷாக்காகிவிட்டதாம். அவருடைய அந்த ஆன்மீக தோற்றத்தை பார்த்ததிலிருந்து இளையராஜாவை சாமி என அழைக்க தொடங்கி விட்டேன் என அந்த பேட்டியில் ரஜினி கூறியிருக்கிறார்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.