Kanguva: சிவா Unfit ஆ… கங்குவா ரிலீஸ் தேதியில் மோசமான திட்டம்… அடி வாங்கிய ஞானவேல்ராஜா…

Published on: November 14, 2024
Kanguva
---Advertisement---

Kanguva: சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தது அமரன் படம் படுதோல்வியடையும் என்ற ஞானவேல் ராஜாவின் படுமோசமான திட்டம் தான் என அம்பலப்பட்டு இருக்கிறது.

கங்குவா திரைப்படம்: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் கங்குவா. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பு செய்திருக்கும் இத்திரைப்படம் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இதையும் படிங்க: Kanguva: கங்குவா படத்திற்கு எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்? உண்மை பின்னணி…

இத்திரைப்படம் நடிகர் சூர்யாவின் பிரம்மாண்ட திரைப்படமாக அமைந்திருக்கிறது. பல வருட இடைவேளைக்கு பின்னர் பலமொழிகளில் கங்குவா திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படம் ரிலீசுக்கு முன்னர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.

ஞானவேல்ராஜாவின் திட்டம்: முதலில் கங்குவா திரைப்படம் அக்டோபர் 10ம் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழு திட்டமிட்டது. லைகா நிறுவனம் திடீரென ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தினை அதே தினத்தில் ரிலீஸ் செய்ய இருப்பதாக அறிவிக்க கங்குவா பின்வாங்கியது.

தீபாவளி தினத்தில் நான்கு முக்கிய படங்கள் வெளியிட இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இருந்தும் அதில் அமரனை தவிர உச்ச நட்சத்திரங்களின் படங்களுமே இல்லை. இதனால் படங்கள் பெரிய அளவில் ஹிட்டடிக்காது. அதனால் இரண்டு வாரம் கழித்து ரிலீஸ் செய்யும் போது நிறைய திரையரங்குகள் கிடைக்கும். 

இதையும் படிங்க: Kanguva: படம் பேரு கத்துவா-ன்னு வச்சிருக்கணும்!… கங்குவாவை கலாய்க்கும் ஃபேன்ஸ்!….

அடுத்தக்கட்ட படம் வெளியாகவும் இன்னும் பல வாரங்கள் இருக்கிறது. இதனால் கங்குவா படத்திற்கு பெரிய அளவிலான வசூல் கிடைக்கும் என ஞானவேல்ராஜா திட்டமிட்டார். அதிலும் அமரன் மட்டுமே பெரிய எதிர்பார்ப்புடன் இருந்தது.

ஆனால் ஞானவேல்ராஜா சிவகார்த்திகேயனை அமரன் படத்துக்கு அன்ஃபிட் என நம்பினார். அவரால் படம் பெரிய அளவு ஹிட் கொடுக்க முடியாது. இந்த கேப்பில் கங்குவாவை ரிலீஸ் செய்து பெரிய தொகையை எடுக்க திட்டமிட்டார். அமரன் திரைப்படம் அவரின் ஆசையில் மண்ணை கொட்டியது.

Kanguva
Kanguva

இதனால் திரையரங்குகள் கங்குவா படத்துக்கு தமிழகத்தில் பாதியாக குறைந்தது. மல்டி பிளக்ஸில் கங்குவாவிடம் இருந்து அமரன் சம அளவு திரையரங்குகளை தக்க வைத்து கொண்டு இருக்கிறது. சிவகார்த்திகேயனை அசால்ட்டாக நினைத்து தற்போது ஞானவேல்ராஜா வசமாக மாட்டிக்கொண்டுவிட்டார்.