Suriya:கங்குவா மட்டுமில்ல.. நவ.14ஆம் தேதி ரிலீஸான சூர்யாவின் மற்ற படங்கள் எதுஎதுனு தெரியுமா?

Published on: November 14, 2024
surya 1
---Advertisement---

Suriya: தமிழ் சினிமாவில் தற்போது ஒரு தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் சூர்யா. அவருடைய நடிப்பில் இன்று வெளியான திரைப்படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் இந்த படம் பெரியளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாகும். சூர்யாவின் கெரியரிலேயே இந்த படம் தான் அதிக அளவு பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படமாக வெளிவந்திருக்கின்றன.

வேட்டையன் வைத்த செக்: பிரம்மாண்டமான முறையில் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் சிறுத்தை சிவா .படம் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. இந்த படம் முதலில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதே தேதியில் ரஜினியின் வேட்டையன் திரைப்படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் ரிலீஸ் தேதியை நவம்பர் 14ஆம் தேதி தள்ளி வைத்தனர்.

இதையும் படிங்க: கயல் முதல் மருமகள் வரை… சன் டாப் 5 தொடர்களின் புரோமோ… இத பாருங்க!..

சொன்ன தேதியில் இன்று படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இதே தேதியில் சூர்யாவின் மற்ற திரைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை பற்றி தான் இங்கு பார்க்க இருக்கிறோம். சூர்யாவின் கெரியரையே மாற்றிய திரைப்படம் என்று சொன்னால் அது நந்தா திரைப்படம் தான். அந்த படத்திற்கு பிறகு தான் சூர்யாவின் நடிப்பு வெளிப்பட்டது .

14 ஆம் தேதி ராசி:ஒரு கமர்சியல் ஹீரோவாக அந்த படத்தில் நடித்திருந்தார் சூர்யா. பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த நந்தா திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகி இருக்கின்றது. 2001 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக லைலா நடித்திருப்பார் .நேர்த்தியான திரை கதையில் எந்தவித விலகல் இல்லாத வசனமும் பாலாவின் இயக்கமும் இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்தது.

இதையும் படிங்க: Kanguva: அட்லீஸ்ட்!.. அந்த வாய வச்சுட்டாவது சும்மா இருந்தீங்களா?!… கங்குவா டீமை வச்சு செய்யும் ப்ளூ சட்டை!…

அடுத்ததாக சூர்யாவிற்கு மிகப்பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய திரைப்படம் வாரணம் ஆயிரம். 2008 ஆம் ஆண்டு வெளியான இந்த படமும் நவம்பர் 14ஆம் தேதி தான் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான இந்த படம் ஒரு அற்புதமான காதல் கதையை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருந்தது .

v1000
v1000

இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமீரா ரெட்டி, சிம்ரன், ரம்யா ஆகியோர்  நடித்திருந்தனர். ஒவ்வொரு பருவத்திலும் மலரும் காதல் கதையை மிக அற்புதமாக விளக்கி இருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன். அந்த வரிசையில் இப்போது அதே நவம்பர் 14ஆம் தேதி கங்குவா திரைப்படமும் வெளியாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.