Vidamuyarchi: அஜித் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் விடாமுயற்சி. மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜூன் ,ரெஜினா, ஆரவ் போன்ற பல முக்கியமான நடிகர்கள் நடிக்கின்றனர். எந்தவொரு பெரிய நடிகர்களின் புதிய படங்களின் அறிவிப்பு வெளியானதும் உடனே அந்தப் படத்தை பற்றிய ஏதாவது ஒரு அப்டேட் வந்து கொண்டே இருக்கும்.
ஆனால் விடாமுயற்சி படத்தை பொருத்தவரைக்கும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தவிர வேறெந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருக்கின்றன. ஒரு பக்கம் விஜய் அடுத்தடுத்து படங்களில் நடித்து அரசியலிலும் தீவிரம் காட்டி வருகிறார். அது சம்பந்தமான பல தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கின்றன.
இதையும் படிங்க: Kanguva: இதையாடா இவ்வளவு நாள் ஒட்டிக்கிட்டு இருந்தீங்க!.. கங்குவாவை மீம்ஸ் போட்டு கலாய்க்கும் ஃபேன்ஸ்…
ஏன் ரஜினியின் படங்கள் பற்றிய அப்டேட்டும் அவ்வப்போது வெளியாகி கொண்டேதான் இருக்கின்றன. இதனால் மேலும் அஜித் ரசிகர்கள் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். படத்தின் கதை என்ன? படத்தின் பாடல்கள் எப்படி இருக்கின்றன? இதுவரை படத்தின் டீசர் கூட வெளியாகவில்லை. ஒரே குழப்பத்தில்தான் இருக்கிறது விடாமுயற்சி.
அதன் ரீலீஸ் தேதியில் கூட குழப்பம் நீடித்த வண்ணம் இருக்கின்றன.இந்த நிலையில் சமீபகாலமாக விடாமுயற்சி படத்தை பற்றியும் அஜித்தை பற்றியும் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதில் விடாமுயற்சி படத்தின் கதை எப்படி? ஏன் இவ்வளவு காலம் தாமதமானது என்பது பற்றி கூறியிருக்கிறார் சுப்ரீம் சுந்தர்.

அதாவது படத்தின் கதையானது காலையில் ஆரம்பித்து சாயங்காலம் முடியுற மாதிரியான ஒரு நாளில் நடக்கும் கதையாம். அதனால் படத்தின் கண்டினியுட்டி மிஸ் ஆகக் கூடாது என்ற காரணத்தினால்தான் படப்பிடிப்பு நடத்தவே தாமதமானது என்று சுப்ரீம் சுந்தர் கூறினார். ஏனெனில் அஜர்பைஜானில் கால நிலை ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டேதான் இருந்ததாம்.
இதையும் படிங்க: சைலண்டா சம்பவம் பண்ண துல்கர் சல்மான்… 100 கோடியை கடந்த லக்கி பாஸ்கர்!…
அந்த கண்டினியுட்டி மிஸ் ஆகக் கூடாது என்ற காரணத்தினால்தான் தகுந்த காலநிலை வரும் வரை காத்திருந்து காத்திருந்து படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்களாம். அதனால்தான் இவ்வளவு தாமதமானது என்று கூறியிருக்கிறார். மேலும் படமும் சூப்பராக வந்திருக்கிறது என்றும் சுப்ரீம் கூறியிருக்கிறார்.





