Connect with us
Kamal

Cinema History

கடவுள் நம்பிக்கை இல்லாத கமலை கலாய்த்த நடிகர்… அவரு சொல்றதுல என்ன தப்பு?

கமல் என்றாலே அவர் பக்கா நாத்திகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அவர் பல கலைப்படங்களிலும் நடித்துள்ளார். கமர்ஷியல் படங்களிலும் நடித்துள்ளார். வித்தியாசமான முயற்சிகளைத் தன் படங்களில் பரீட்சார்த்தமாக செய்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றவர்.

புதுப்புது பரிமாணம்

Also read: ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து!… இரு தரப்புக்கும் ஐகோர்ட் கொடுத்த உத்தரவு?!… திடீர் ட்விஸ்ட்..!

காக்கிச்சட்டை, சகலகலாவல்லவனில் கமர்ஷியல் நாயகனாகவும், சலங்கை ஒலி, நாயகன், மூன்றாம்பிறை படங்களில் நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் வகையிலும் நடித்து இருந்தார். வறுமையின் நிறம் சிவப்பு, உன்னால் முடியும் தம்பி படங்களில் இருந்து சிகப்பு ரோஜாக்கள் இப்படியும் கூட நடிக்க முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்து இருப்பார்.

சத்யாவில் புரட்சிகர இளைஞனாகவும், அபூர்வசகோதரர்கள் படத்தில் குள்ளமாகவும், குருதிப்புனல், ஆளவந்தான், வேட்டையாடு விளையாடு படங்களில் வேற லெவல் பரிமாணத்தையும் காட்டியுள்ளார். ஹேராம், இந்தியன், அவ்வை சண்முகி, தசாவதாரம் படங்களில் வேறொரு பரிமாணம்.

குழப்பிய கமல்

delhiganesh, kamal

delhiganesh, kamal

அன்பேசிவம், காதலா காதலா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், பஞ்சதந்திரம் என எந்தப் படங்களை எடுத்தாலும் வேறு வேறு சாயல் தான் வரும். அந்தவகையில் நீண்டநாள்களாக கமலின் நாத்திகம் படங்களிலும் தலைகாட்டியது. குறிப்பாக தசாவதாரம் படத்தில் வரும் கடவுள் சம்பந்தமாக கமல் பேசும் டயலாக்கைச் சொல்லலாம்.

என்னடா இவரு இப்படி குழப்புறாரே என்று நமக்குத் தோன்றும். இதுகுறித்து மறைந்த பிரபல குணச்சித்திர நடிகரும், கமலின் நெருங்கிய நண்பருமான டெல்லி கணேஷ் என்ன சொல்றாருன்னு பாருங்க.

தவழ்ந்த போதே விருது

தவழ்கின்ற காலத்திலேயே அவார்டு வாங்கினீர்கள். அன்று உங்களுக்குக் கலைப்படம் என்றால் என்னவென்று தெரியாது. கமர்ஷியல் படம் என்றால் என்னவென்றே தெரியாது. ஒன்றுமே தெரியாத காலத்திலேயே பட்டம் வாங்கி விட்டீர்கள். அம்மாவும் நீயே. அப்பாவும் நீயே என்று பாடினீர்கள்.

இன்று உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் உங்கள் முதல் படத்தில் நீங்கள் கடவுளைத் தான் கும்பிட்டீர்கள். அது பரவாயில்லை. அவர் வளர்ந்த பின்பு ஞானம் பிறந்தது. அதுல எது நல்லது? எது கெட்டதுன்னு அவருக்கு ஆராய்ந்து பார்க்கிற தன்மை வளர்ந்தது. அதுல நாத்திகம் பிறந்தது.

தசாவதாரத்தில் கடவுள்

Also read: Biggboss Tamil: சீசீ… பிக்பாஸில் ஆனந்தி போட்ட ’அந்த’ சப்தம்… இதுவே பசங்க பண்ணா என்ன ஆகிருக்கும்?

தசாவதாரத்திலே நீங்கள் சொல்வீர்கள். கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்று எனக்குத் தெரியாது என்று. இருந்தால் நல்லது என்று சொன்னீர்கள். அங்கே உங்களைப் பாராட்டினேன். அவர் இருக்கிறார். அதனால் தான் எங்களுக்கு ஒரு நல்ல நடிகனைத் தந்திருக்கிறார் அவர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமல் நடுவராகப் பொறுப்பேற்ற பட்டிமன்றத்தில் டெல்லிகணேஷ் பேசியது தான் அது.

google news
Continue Reading

More in Cinema History

To Top