ஜோதா அக்பரையே ஓவர் டேக் பண்ண ரம்யா பாண்டியன்!… கல்யாணமாகியும் அந்த போட்டோ சூட்ட விடலயே!..

Published on: November 15, 2024
---Advertisement---

ஜோதா அக்பர் கேட்டப்பில் நடிகை ரம்யா பாண்டியன் தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிறு வயது முதலே சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட நடிகை ரம்யா பாண்டியன் கல்லூரி படிக்கும் போது குறும்படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டம்மி பட்டாசு என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான ஜோக்கர் படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அதன் பிறகு சமுத்திரகனிவுடன் ஆண் தேவதை என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் டிவி நிகழ்ச்சிகள் பக்கம் திரும்பிய நடிகை ரம்யா பாண்டியன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

இதையும் படிங்க: Kanguva: மனநலம் கருதி இப்படத்தை தவிர்ப்பது நல்லது?!… ஒரே போடா போட்ட பிரபல யூடியூபர்..!

படங்களை காட்டிலும் டிவி நிகழ்ச்சிகள் தான் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்றே கூறலாம். அதன்பிறகு சினிமாவில் கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றார். கடைசியாக நண்பர்கள் நேரத்து மயக்கம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது இடும்பன்காரி என்கின்ற திரைப்படத்திலும் ஒரு வெப் சீரியஸிலும் நடித்து வருகின்றார்.

ramya

ஒரு பக்கம் சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார். அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது காதலர் லோவல் தவானை அறிமுகம் செய்து வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 8-ம் தேதி ரிஷிகேஷில் உள்ள கங்கை நதியோரம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் இணையதள பக்கங்களில் வைரலாகி வந்தது. திருமணத்திற்கு பிறகு திருமணத்திற்கு முன்பு நடந்த ஹல்தி, சங்கீத் போன்ற கொண்டாட்டங்கள் தொடர்பான புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வந்தார்.

இதையும் படிங்க: விஜயை போல் தான் நானும்.. அடுத்த சூப்பர் ஸ்டாருனு சொன்ன வாயா இது?

இந்நிலையில் தற்போது தனது காதல் கணவர் லோவல் தவானுடன் ஜோதா அக்பர் கேட்டபில் போட்டோ சூட் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து இருக்கின்றார். பிங்க் நிற உடையில் இருவரும் மிக அழகாக இருக்கிறார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. ரசிகர்கள் பலரும் திருமணம் முடிந்தும் உங்க போட்டோ சூட் மட்டும் முடியவில்லையே என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.