latest news
சூர்யாவை சிவகார்த்திகேயனாக மாற்றிய கங்குவா!. இனிமே கேப் விடாம அடிப்பாங்களே!…
Kanguva: பொதுவாக புத்திசாலி நடிகர்கள் சம்பளம் வாங்கினோமோ.. நடித்தோமோ என நிறுத்திக்கொள்வார்கள். படத்தை தயாரிக்கும் வேலையில் இறங்கவே மாட்டார்கள். சில நடிகர்கள் மட்டுமே சொந்த பணத்தை போட்டு படம் எடுத்து ரிஸ்க் எடுப்பார்கள். பல வருடங்களாக படமெடுத்து வரும் தயாரிப்பாளர்களே நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
அப்படி இருக்கும்போது திடீரென தயாரிப்பாளராக மாறிய நடிகர்கள் தடுமாறுவார்கள். படம் ஓடவில்லை எனில் நஷ்டத்தை சந்திப்பார்கள். ரஜினி, கமல் கூட இதற்கு தப்பியது இல்லை. பாபா படத்தை தயாரித்து வினியோகஸ்தர்கள் கொடுத்த பணத்தை திருப்பிக் கொடுத்தார் ரஜினி, கமல் சொந்த பணத்தில் தயாரித்த ஹே ராம் போன்ற படங்கள் தோல்வி அடைந்தது.
இதையும் படிங்க: அமரன் வெற்றி!… பாலத்தில் அந்தர் பல்டி அடிக்கும் எஸ்கே?!… வைரல் வீடியோ!…
அதேபோல் ஆர்யா, தனுஷ், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பல நடிகர்கள் சொந்த பணம் எடுத்து காசை இழந்திருக்கிறார்கள். சிவகார்த்திகேயனும் அப்படி சொந்த பணம் எடுத்து 100 கோடி வரை கடனாளி ஆகி பல வருடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கடனை அடைத்தார்.
அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும்போது கடன் பிரச்சனை அவரின் கழுத்தை நெருக்கும். எனவே, புதிய படங்களில் நடிப்பதாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோ, அல்லது சில கோடிகளை கொடுத்தோ படத்தை ரிலீஸ் செய்வார் சிவகார்த்திகேயேன். தற்போது இதே பிரச்சனையை கங்குவா படம் மூலம் சந்தித்திருக்கிறார் சூர்யா.
சூர்யாவின் நெருங்கிய உறவினர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான திரைப்படம்தான் கங்குவா. இந்த படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஆனால், படத்தில் கதை என ஒன்றுமில்லை. திரைக்கதை ஈர்க்கவில்லை. படத்தில் ஒன்றும் புரியவில்லை. கதை இல்லாததால் காட்சிகளில் ஒன்றமுடியவில்லை. பின்னணி இசை என்கிற பெயரில் ஒரே இரைச்சல், எல்லா காட்சிகளிலும் யாராவது கத்திக்கொண்டே இருக்கிறார்கள் என படம் பார்த்தவர்கள் பலரும் சொன்னார்கள்.
கங்குவா படத்தின் எதிர்மறையான விமர்சனங்கள் படத்தின் வசூலை கடுமையாக பாதிக்கும் என சொல்லப்படுகிறது. பலரிடமும் ஃபைனான்ஸ் வாங்கி இப்படத்தை தயாரித்திருந்தார் ஞானவேல் ராஜா. இதில் ஜஸ்வந்த் பண்டாரி என்கிற ஃபைனான்சியரிடம் வாங்கிய 75 கோடி கடனை படத்தின் ரிலீஸுக்கு முன்பே கொடுக்கவேண்டும். ஆனால், ஞானவேல் ராஜாவால் கொடுக்க முடியவில்லை. 40 கோடியை கொடுத்த நிலையில், 35 கோடிக்கு சூர்யா முன் வந்து படங்களில் நடித்து கொடுப்பதாக சொல்லி இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவியிருக்கிறார்.
படம் ஓடி லாபத்தை பெற்றால் கடனை அடைத்துவிடலாம். ஆனால், கங்குவா படம் பெரிய வசூலை பெற வாய்ப்பில்லை. எனவே, சூர்யாவின் அந்த கடனை அடைக்கும்வரை அவரின் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் இந்த பிரச்சனை அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என கணிக்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் சந்தித்த அதே பிரச்சனையை கங்குவா படத்தால் சூர்யாவும் சந்திப்பார் என்கிற திரையுலகம்!…
இதையும் படிங்க: Kanguva: இந்தியன் 2-வுக்கு அடுத்து கங்குவாதான்!.. ஊற வச்சி ஒரு மாசம் அடிப்பாங்களே!….