Connect with us

latest news

ரோகிணியின் பித்தலாட்டம்… எழில் விஷயத்தை உடைத்த செல்வி… மீனாவை கேள்வி கேட்ட பாண்டியன்

Vijay serials: தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களான பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர்களில் இன்று நடக்க இருக்கும் எபிசோட்களின் தொகுப்பு.

சிறகடிக்க ஆசை: மீனாவின் மாலை அலங்கார பிசினஸிற்காக ஸ்ருதியின் ஐடியாவில் போட்டோ ஷூட் நடத்துகின்றனர். பின்னர் சுத்தி சொல்லிக் கொடுக்கும் வசனங்களை மீனா பேச அதை வீடியோவாக எடுத்துக் கொள்கின்றனர். ரோகிணி மனோஜின் கடையில் இருக்க சிட்டி கால் செய்து பி ஏ இறந்துவிட்டால் உங்கள் வீட்டில் முன் போட்டுவிட்டு நான் வெளியூர் ஓடி விடுவேன் என மிரட்டி விடுகிறார்.

இதையும் படிங்க: Kanguva: அடக்கொடுமையே… அமரன்ல பாதி கூட தாண்டல போலயே?!.. கங்குவா படத்தின் தமிழ்நாடு வசூல் இதோ!…

இதனால் விஜயாவிடம் இருக்கும் பணத்தை திருட ரோகிணி திட்டம் போடுகிறார். அதன் பேரில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பார்வதி வீட்டிற்கு சென்று விஜயா மற்றும் பார்வதியை சாப்பிட வைக்கிறார். அவர்கள் அசந்த நேரம் பீரோவில் இருக்கும் இரண்டு லட்சம் பணத்தை திருடி விடுகிறார். வீட்டில் ரவி மற்றும் முத்து, ஸ்ருதி மற்றும் மீனா சந்தோஷமாக புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி: பாக்கியா வீட்டிற்கு வர செழியன் மற்றும் இனியா ரெஸ்டாரண்டில் பிரச்சனை நடந்தது இருக்கு அப்பா தான் காரணமா என கேட்கின்றனர். பாக்கியாவும் ஆமாம் என சொல்ல ஈஸ்வரியும் கோபியை நினைத்து வருத்தப்பட்டு பேசிக் கொண்டிருக்கிறார்.

உடனே இனியா நீ ஏன் அண்ணனோட பூஜைக்கு வரல என கேட்கிறார். பாக்கியா அமைதியாக இருக்க செழியனும் அதைப் பிடித்துக் கொண்டு எழில் கவலைப்பட்டதாக பேசிக் கொண்டே இருக்கிறார். ஆனால் இதை கேட்டு பொறுக்காத செல்வி, எழில் தம்பி தான் அக்காவை வர வேண்டாம் எனக் கூறியதாக உண்மையை உடைத்து விடுகிறார்.

இதையும் படிங்க: Kanguva: காசு கொடுத்து கங்குவாவை ரிலீஸ் பண்ண சூர்யா!.. ஓவர் கான்பிடன்ஸ்ல இப்படி ஆகிப்போச்சே!…

அது குறித்து ஜெனி மற்றும் செழியன் கேட்க பாக்கியாவும் நடந்த விஷயங்களை கூறுகிறார். வீட்டிற்கு வரும் எழில் அமிர்தாவிடம் ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சினைக்கு காரணம் அப்பா தான் என உண்மையை கூறுகிறார். பாக்கியா வீட்டில் செல்வி எப்போ போலீஸ் வரும் என ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார். அவர் நினைத்தது போல போலீஸ் வந்தது கோபியை அரஸ்ட் செய்வதாக கூறுகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: கதிர் மற்றும் மீனா இருவரும் கடைக்கு சென்று செந்திலுக்கு சட்டை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். கடையில் இருக்கும் எல்லா சட்டையையும் சலித்து போட்டு மீனா தேடிக் கொண்டிருக்கிறார். சக்திவேல் குமாருடன் இணைந்து முத்துவேலுக்கு எதிராக திட்டம் போடுகின்றனர்.

அரசியை திருமணம் செய்து பாண்டியனை அழுக விட பேசிக் கொண்டிருக்கின்றனர். வீட்டிற்கு மீனா மற்றும் கதிர் வர சரியாக அந்த நேரத்தில் பாண்டியன் இருக்கிறார். டிரஸ் எடுத்து வந்த விஷயம் தெரிந்து விட செந்திலிடம் நக்கலாக பேசுகிறார். பின்னர் 2000 அதன் விலை என தெரிந்து கொள்ள மீனாவை கோபமாக பேசிவிட்டு செல்கிறார்.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top