இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கும் படங்களில் புஷ்பா 2 படமும் ஒன்று. பெரிதாக கதை இல்லை. ஆனால் ஹீரோயிசம், சமந்தா பாட்டு, பஹத் பாஸில் ஆகியோரை வைத்து வித்தை காட்டி வசூல் செய்தனர்.
தற்போது இரண்டாவது பார்ட்டும் டிசம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதில் ஒரு பாட்டுக்கு ஸ்ரீலீலாவை புக் செய்து ஹைப் ஏற்றி இருக்கின்றனர். இந்த படத்தின் போது தயாரிப்பாளர்- ஹீரோ இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.
இதையும் படிங்க: Biggboss Tamil 8: வைல்டு கார்டு போட்டியாளர்களோட ‘சம்பளம்’ இதுதான்!
ஆனால் படத்தின் வசூலை நினைத்து இருவரும் வெளிப்படையாக தாக்கி கொள்ளவில்லை. என்றாலும் இந்த படத்திற்கு பிறகு இருவரும் இனி இணைவது கஷ்டம் தான். இருவரின் ஈகோவினால் தான் படம் இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகிறது.
இந்தநிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. படம் பேன் இந்தியாவாக உருவாகி இருப்பதாலும், பிசினஸ் எல்லாம் நன்றாக போய் இருப்பதாலும் அல்லு அர்ஜுன் இப்படத்திற்காக ரூபாய் 3௦௦ கோடியை சம்பளமாக வாங்கி இருக்கிறாராம்.

தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்தார். கேரியரின் உச்சத்தில் அதனை விட்டு வருகிறேன் என்று மேடையில் அறிவித்து, ரசிகர்கள் நெஞ்சை உருக்கிய விஜய் தளபதி 69 படத்திற்காக வாங்கும் சம்பளம் ரூபாய் 275 கோடி.
ஆனால் அவரை விடவும் ஜூனியர் நடிகர் 25 கோடி ரூபாய் அதிகமாக சம்பளம் பெற்றுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் இனி தென்னிந்தியா சினிமாவினை காப்பாத்த அல்லு அர்ஜுன் தான் வரணும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Kanguva: அடிமேல் அடி!… தியேட்டரில் காத்து வாங்குதா கங்குவா?!… 2-ம் நாள் வசூல் விவரம் இதோ!…





