Nayanthara: தனுஷ் தன்னிடம் 10 கோடி கேட்பதாக நடிகை நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தன்னுடைய கணக்கிலிருந்து வெளியிட்டிருக்கும் பதிவு வைரலாகி வரும் நிலையில் நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் செய்த தில்லு முல்லு விஷயங்கள் வெளியாகியிருக்கிறது.
வேலையில்லா பட்டதாரி திரைப்படத்தில் வேலை செய்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது நம்பிக்கை வைத்த நடிகர் தனுஷ் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் நானும் ரவுடிதான் திரைப்படத்தை தயாரிக்க முடிவெடுத்தார். இதற்காக பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவை படத்தில் ஒப்பந்தம் செய்தார்.
இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்… என்னன்னு நீங்களே பாருங்க!
இப்படத்தில் இருந்து தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இப்படத்தின் பட்ஜெட் ஆறு கோடி மட்டுமே தனுஷ் முடிவு எடுத்திருந்தார். ஆனால் இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தின் பட்ஜெட்டை பதினாறு கோடியாக இழுத்தடித்தார். மற்ற எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இந்த நேரத்தில் படத்தை கைவிட தான் முடிவெடுப்பார்.
இருந்தும் தனுஷ், விஜய் சேதுபதிக்காக நானும் ரவுடிதான் திரைப்படத்தை பட்ஜெட்டை விட குறைந்த விலைக்கு விற்பனை செய்தார். இதனால் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்பட்டதும் உண்மைதான். விநியோகிஸ்தர்களுக்கு வேண்டுமென்றால் படம் லாபமாக இருக்கலாம்.
இதையும் படிங்க: நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…
ஆனால் தனுஷுக்கு இந்த படத்தில் நிறைய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக கூட என்ஓசியை தர அவர்களது நிறுவனம் மறுத்திருக்கலாம். என்ஓசி கொடுக்காததற்கு இவ்வளவு கொடூரமான வார்த்தைகளை போட்டு ஒரு பெரிய பிரபலத்தை பொதுவெளியில் அசிங்கப்படுத்துவது நியாயமாக இருக்குமா?
தன்னுடைய கல்யாணத்திலிருந்து பெரிய அளவில் லாபத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் நயன்தாரா தனுஷை அன்பாக இருங்கள் என அறிவுரை கூறுவது ஆச்சரி்யமாக இருக்கிறது. உங்களுடைய கணவருக்கு அவர் செய்த நன்றிக்காக கொஞ்சம் பொறுமையாக இதை கையாண்டிருக்கலாமே என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்திருக்கிறது.
