4 கதை சொல்லி 5-வதாக சூர்யா ஓகே செய்த கதைதான் கங்குவா!.. லீக் ஆன புதிய தகவல்!..

Published on: November 17, 2024
suriya
---Advertisement---

Kanguva: சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் சிவா. அஜித்தை வைத்து 4 திரைப்படங்களை இயக்கிய ஒரே இயக்குனர். அஜித்தின் குட்புக்கில் எப்போதும் இருப்பவர். ரஜினியை வைத்து சிவா இயக்கிய அண்ணாத்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை.

அதன் பின்னர்தான் சூர்யாவை வைத்து சிவா இயக்கி திரைப்படம்தான் கங்குவா. சூர்யாவின் உறவினர் ஞானவேல் ராஜா தயாரிப்பில் கடந்த 2 வருடங்களாக இப்படம் உருவானது. மிகவும் அதிக பட்ஜெட்டில் இப்படத்தை உருவாக்கியிருந்தனர். சூர்யாவும் கடுமையான உழைப்பை போட்டிருந்தார்.

இதையும் படிங்க: நான் சூர்யாவின் மனைவி இல்ல… நயன்தாராவை தொடர்ந்து அறிக்கை விட்ட ஜோ

அதோடு, ஹாலிவுட்டுக்கு இணையாக ஒளிப்பதிவு, எடிட்டிங், ஆர்ட் டைரக்‌ஷன், ஆக்‌ஷன் காட்சிகள் இருந்தது. ஆனால், முதல் காட்சி வெளிவருவதற்கு முன்பே இப்படத்தின் மீது எதிர்மறையான விமர்சனங்களை பலரும் பகிர்ந்தனர். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர்களில் 80 சதவீதம் பேருக்கு இப்படம் பிடிக்கவில்லை.

படத்தில் கதை இல்லை, திரைக்கதையில் சுவாரஸ்யம் இல்லை, காட்சிகளுக்கான காரணங்கள் புரியவில்லை. ஒன்றோடு ஒன்று தொடர்பு இல்லை, படத்தின் பல காட்சிகளிலும் ஒரே இரைச்சலாக இருந்தது. சூர்யா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் பல காட்சிகளில் கத்திகொண்டே இருக்கிறார்கள்’ என சொன்னார்கள்.

பல கோடி பட்ஜெட் போட்டு பல மொழிகளில் வெளியான படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலிக்கும் என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், முதல்நாளே கங்குவா படத்திற்கு மிகவும் மோசமான விமர்சனங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. 150 கோடியை இப்படம் தாண்டுமா என்பதே தெரியவில்லை.

kanguva
kanguva

இந்த படம் பற்றி ரிலீசுக்கு முன் பேசிய ஞானவேல் ராஜா ‘சூர்யாவிடம் 4 கதைகள் சொல்லி இருக்கிறேன். அதுல 2 கதையை தேர்ந்தெடுத்து அவருக்கு எது பிடித்திருக்கிறதோ அதை பண்ணலாம் என சிவா என்னிடம் சொன்னார். பேச்சுவார்த்தை போய்க்கொண்டே இருந்தது.

ஒருநாள் சிவா என்னை அழைத்து என்கிட்ட 5வதாக ஒரு கதை இருக்கு. அதை நான் சூர்யா சார்கிட்ட சொன்னா அதத்தான் பண்ணலாம்னு சொல்லுவார். என்கிட்ட இருக்கிறதிலேயே அது சிறந்த கதை. ஆனா அதுக்கு அதிக பட்ஜெட் செலவாகும் என சொன்னார். அதன்பின் அந்த கதையை கேட்டேன். எனக்கு பிடித்திருந்தது. அப்படி உருவான படம்தான் கங்குவா’ என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Nayanthara: ‘சின்னவரிடம்’ சென்ற நயன் பஞ்சாயத்து?… தனுஷின் பதில் என்ன? ,,

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.