Cinema History
பாரதிராஜாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாக்கியராஜ்…! எல்லாம் அந்த நடிகையால தான்!
16வயதினிலே படத்திற்குப் பிறகு பாரதிராஜா தனது அடுத்த படத்துக்கு எல்லாமே புதுமுகங்கள் தான் என்பதில் உறுதியாக இருந்தார். அதற்கு இளையராஜா உள்பட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்களாம். அந்தக் காலகட்டத்தில் பாரதிராஜா போய் எந்த நடிகரிடம் கால்ஷீட் கேட்டாலும் உடனே கொடுத்து விடுவார்கள்.
கிழக்கே போகும் ரயில்
Also read: Nayanthara: நயன்தாரா மேல காதலை விட அதுதான் அதிகமாம்… விக்னேஷ் சிவன் சொல்ற அந்த வார்த்தை தான் கவிதை!
அப்படி இருக்க இவர் ஏன் புதுமுகங்களைத் தேடுகிறார்னு எல்லாருக்கும் குழப்பம். நட்சத்திர தேர்வு நடந்தது. தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியும் கலந்து கொண்டார். ஆனால் செலக்ட் ஆனது சுதாகர். படத்தின் பெயர் கிழக்கே போகும் ரயில். ஹீரோயினுக்கு யாரும் கிடைக்கவில்லை.
மறுத்த ராதிகா
ஒரு ஆல்பத்தைத் தற்செயலாகப் பார்த்துள்ள பாரதிராஜாவுக்கு அதில் இருந்த ராதிகாவைப் பிடித்து விட்டது. உடனே வீட்டில் போய் கேட்க, ராதிகா மறுத்துவிட்டார். ஆனால் அவரது அம்மா கீதா உடனே ராதிகாவை சமரசம் செய்து ஒப்புக் கொள்ள வைத்து விட்டார்.
கடும் எதிர்ப்பு
அப்போது ராதிகா குண்டாக இருப்பாராம். அதனால் பத்திரிகைக்கு போட்டோவைக் கொடுக்க வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தாராம் பாரதிராஜா. பிறகு லொகேஷனுக்கு ராதிகாவை அழைத்துச் சென்றுள்ளார். பாக்கியராஜ் அவரைப் பார்த்ததும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாராம். இதனால் பாரதிராஜாவுக்கும், பாக்கியராஜிக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு விட்டது.
பாரதிராஜா திட்டு
அதே நேரம் தமிழ் தெரியாது, நடிக்கத் தெரியாது என பல குறைகளுடன் தான் ராதிகா நடித்தார். ஒவ்வொரு முறையும் பாரதிராஜா திட்டுவாராம். அழுத படி நான் போறேன். எனக்கு சினிமா செட்டாகாதுன்னு சொல்வாரம். ஆனால் எல்லாவற்றையும் கடந்து படம் வெளியாகியது. தூள்கிளப்பி படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டானது. ராதிகாவை தனித்துவமான நடிகை என்றார்கள். 1978 முதல் 1991 வரை ராதிகாவுக்குத் தான் மார்க்கெட் என்றாகி விட்டது.
கிராமிய காதல் படம்
Also read: நெகட்டிவிட்டிய சொன்னாதான் ரீச் ஆகுது?!.. கங்குவா படம் குறித்து நடிகர் சூரி சொன்ன விமர்சனம்!…
16 வயதினிலே தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணுவுடன் இணைந்து பாரதிராஜா தயாரித்த படம் கிழக்கே போகும் ரயில். இளையராஜா இசையில் அத்தனைப் பாடல்களும் ஹிட். சுதாகர், ராதிகா உள்பட பலர் நடித்து வெளியான அருமையான கிராமிய காதல் படம். 1978ல் வெளியானது. கோவில் மணியோசை, மாஞ்சோலைக் கிளிதானோ, பூவரசம்பூ பூத்தாச்சு, மலர்களே ஆகிய பாடல்கள் உள்ளன.