latest news
மீண்டும் சிக்கலில் மீனா… பாண்டியன் வீட்டில் அடுத்த விஷேசம்.. பிடிவாதமாக இருக்கும் பாக்கியா!..
Vijay serials: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடக்க இருக்கும் இன்றைய எபிசோடுகளின் தொகுப்பு.
சிறகடிக்க ஆசை: மனோஜ் பணம் கொடுக்காத விஷயம் குறித்து அவரை கேட்க அவரும் முடிந்த பின்னர் கொடுத்துக்கலாம் என நினைத்தேன் என ஒரே பல்லவியை பாடுகிறார். மீனா ரோகிணியிடம் கேட்க அவரும் அதே டயலாக்கை பேச கடுப்பாகி விடுகின்றனர். அண்ணாமலை மனோஜை அழைத்து அமர வைத்து பொறுமையாக கேட்க அப்பொழுது அதை டயலாக்கை கூற அவரும் கோபமாகி அடிக்க சென்று விடுகிறார்.
இதையும் படிங்க: இது நடக்கும் என நினைத்தேன்… கனத்த இதயத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு… எப்படி இருந்த மனுஷர்?
இதனால் நடுவில் செல்லும் முத்து அவன பணம் அனுப்ப சொல்லுங்கள் என்கிறார். எல்லோருக்கும் பணம் ரோகிணி அனுப்பி விட விஜயாவிற்கு மட்டும் 15 ஆயிரம் தான் என்கிறார் மனோஜ். என்ன விஷயம் என கேட்க நேற்றே பத்தாயிரம் வாங்கிவிட்டதாக கூறுகிறார். முத்து கார் ட்யூ கட்ட வர மீனா ஏற்கனவே கட்டிவிட்டதாக கூறுகின்றனர்.
முத்து வெளியில் வர மீனா இருப்பதை பார்த்து அவரிடம் இதை நீ செலவுக்கு வைத்துக் கொள்ள வேண்டியதுதானே என்கிறார். அவரை தொடர்ந்து அண்ணாமலையும் தன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து முத்துவிற்கு கார் பணம் கட்ட வருகிறார். பார்வதி வீட்டிற்கு மீனா வர துணியை மடித்து வைக்க கூறுகிறார் விஜயா.
ரதியின் அம்மா புடவை பிசினஸ் செய்வதாக கூறி அவரை அழைத்து வர காசை எடுக்க பார்வதி குழுவிற்கு வருகிறார். ஆனால் அங்கு பணம் இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். இதை விஜயாவிடம் சொல்ல அவரும் யோசனை செய்கிறார்.
பாக்கியலட்சுமி: கோபியை போலீசில் பிடித்து சென்றதால் செழியன் மற்றும் இனியா ஆகியோர் கோபமாக இருக்கின்றனர். பாக்கியா சமைத்து வைத்துவிட்டு அவர்களை சாப்பிட கூப்பிட யாரும் வராமல் அமைதியாக இருக்கின்றனர். ஈஸ்வரி உன்னுடைய கோபம் நியாயம் தான். ஆனால் அவன் மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கிடு என கூறுகிறார்.
இதையும் படிங்க: ஆவணப்படம்னா உண்மையைச் சொல்லணும்… கோயம்பேடு ஆம்னி பஸ் மறந்துடுச்சா நயன்தாரா?
ஆனால் பாக்கியா அவர் தப்பு செஞ்சப்ப போகாத மானம் இப்ப போச்சு என்றால் பரவால்ல என்கிறார். இனியா நீ ரொம்ப ஓவரா பண்ணாதம்மா எனக்கு கூறுகிறார். ரிப்போர்ட்டர்கள் வந்து கேள்வி கேட்க என்னுடைய ரெஸ்டாரண்டில் எந்த தப்பான விஷயம் நடக்கவில்லை. அதை நிரூபணம் செய்ய தான் இந்த புகார் கொடுத்து இருக்கிறேன் என்கிறார்.
கோபியை வந்து போலீஸ் நிலையத்தில் பார்க்கும் செழியன் நீங்க செஞ்சீங்களா என கேட்க எனக்கு எதுவுமே தெரியாது என கோபி நாடகமாடுகிறார். அவருடைய நண்பர் செந்தில் ஜாமீன் வாங்கி வந்து கோபியை அழைத்து செல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2: மயில் அப்பா மற்றும் அம்மா இருவரும் பாண்டியன் வீட்டிற்கு வருகின்றனர். தாலி பிரித்து கோர்ப்பது குறித்து பேசிக் கொண்டிருக்கும்போது மூவருக்கும் ஒன்றாக இதை செய்துவிடலாம் என முடிவெடுக்கின்றனர். நகையை கேட்டு விடுவார்களோ என மயில் அம்மா தயக்கமாக இருக்க கோமதி மூவருக்கும் ஒன்றாக செயின் எடுத்து வைத்திருப்பதாக கூறுகிறார் பாண்டியன்.
செந்தில் தேர்வு எழுதி முடித்துவிட அவரை அழைத்து கொண்டு மீனா வீட்டிற்கு வருகிறார். குழலி வீட்டிற்கு வந்திருக்க எல்லோரையும் கலாய்த்து கொண்டிருக்கிறார். கதிரை கால் செய்து வர சொல்கிறேன். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என குழலி கூறுகிறார். அரசி வெளியில் நிற்க அவரை காதலிக்க வைக்க குமார் தன்னுடைய திட்டத்தை தொடங்கி விடுகிறார். இதை பார்க்கும் ராஜி அவரை கண்டித்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டாரா ஞானவேல் ராஜா?… சிவா பண்ண வேலை!… பொங்கிய பயில்வான்!…