latest news
3 படங்களை காலி செய்த FDFS ரிவ்யூ!.. தயாரிப்பாளர் சங்கம் எடுத்த முக்கிய முடிவு!..
FDFS review: ரஜினி, விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு போன்ற அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு திருவிழாதான். பேனர் மற்றும் கட் அவுட் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது என ஒரே கொண்டாட்டம்தான். ஒரு பக்கம் படம் பார்த்துவிட்டு படத்தை ஆஹோ ஓஹோ என்றும் புகழ்வார்.
திரையரங்களில் முதல் நாள் முதல் காட்சி பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்காகவே பல யுடியூப் சேனல்கள் காத்திருக்கும். ஆனால், படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தால் அதுவே வசூலையும் பாதிக்கும். பொதுவாக புதிய படங்களின் சிறப்பு காட்சி தமிழகத்தில் காலை 9 மணிக்கு எனில் ஒரு சில தியேட்டர்களில் 4 மணிக்கே போடுகிறார்கள்.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்திலும் விளையாடிய தனுஷ்… இப்படிலாம் கொளுத்தி விடாதீங்கப்பா!..
அங்கு செல்லும் யுடியூப் சேனல்கள் ரசிகர்களிடம் கருத்தை கேட்டு 7 மணிக்கே அதை ஒளிபரப்பி விடுகிறார்கள். படம் நன்றாக இல்லை என சிலர் சொன்னால் அதுவே ஹைலைட்டாக மாறி பலரையும் படம் பார்க்க விடாமல் அது தடுத்து விடுகிறது. அதேபோல், ஒரு நடிகரை பிடிக்காத நபர்களும் வன்மதை கக்கி படத்திற்கு எதிராக பேசுகிறார்கள். அதுவும் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி படம் இப்படித்தான் இருக்கும் போல என்கிற இமேஜை பலரிடம் உருவாக்கி விடுகிறது.
இதனால் வசூல் கடுமையாக பாதிக்கிறது. கமலின் இந்தியன் 2, ரஜினியின் வேட்டையன், சூர்யாவின் கங்குவா போன்ற படங்களை இப்படித்தான் எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக கங்குவா படத்தை பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக விமர்சித்தனர். அந்த வீடியோக்கள் பலரையும் படம் பார்க்கவிடாமல் தடுத்துவிட்டது.
இந்நிலையில், பாரதிராஜாவை தலைவராக கொண்டுள்ள நடப்பு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஒரு அறிக்கை வெளியாகியிருக்கிறது. தியேட்டருக்குள் நின்று படம் எப்படி இருக்கிறது என ரசிகர்களிடம் யுடியூப் சேனல்கள் பேட்டி எடுப்பதை தடை செய்ய வேண்டும். ஏனெனில், பலரும் தனிப்பட்ட வன்மதை கக்குகிறார்கள். அண்மையில் கங்குவா படத்திற்கும் ஒருவர் அப்படித்தான் வன்மத்தை கக்கினார். தனிப்பட்ட வன்மத்தில் திரைப்படங்களை விமர்சிக்கும் விமர்சகர்கள், ரசிகர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, திரையரங்க வளாகங்களில் படம் எப்படி இருக்கிறது என கருத்து கேட்க தடை விதிக்க வேண்டும் என தியேட்டர் அதிபர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.