நன்றி கெட்டதனமா நடந்துகிட்ட நயன்!.. பொதுநிகழ்ச்சியில் சிம்புவுக்கு நேர்ந்த அவமானம்!.. இதெல்லாம் ஓவரு!…

Published on: November 21, 2024
simbu
---Advertisement---

நடிகை நயன்தாரா பொது நிகழ்ச்சிகள் நடிகர் சிம்புவை அவமானப்படுத்தியதாக வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்ற படத்துடன் வலம் வருபவர் நடிகை நயன்தாரா. ஐயா என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி சினிமாவில் 20 வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். 40 வயது தாண்டிய நிலையிலும் தற்போது வரை ஹீரோயினியாக நடித்து அசதி வருகின்றார். தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றார்.

இதையும் படிங்க: என்னது நான் வில்லனா?… இத யாரு கிளப்பிவிட்டதுனு தெரியும்… விஷால் இப்படி சொல்லிட்டாரே…

இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். திருமணத்திற்கு பிறகு குடும்பம், குழந்தைகள், பிசினஸ் இவற்றுடன் சேர்த்து சினிமாவிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் கடைசியாக அன்னபூரணி என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து தற்போது மண்ணாங்கட்டி மற்றும் ராக்காயி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். கடந்த சில நாட்களாக நடிகை நயன்தாராவின் அறிக்கை தான் ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கின்றது. நடிகர் தனுஷ் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்து நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலர் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், பலர் தனுஷுக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.

nayanthara_dhanush
nayanthara_dhanush

இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் தனது பேட்டியில் நயன்தாராவின் இந்த அறிக்கை குறித்து பேசி இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது நடிகர் தனுஷை பற்றி நீங்கள் இவ்வளவு பேசுகிறீர்களே, நீங்கள் செய்வது மட்டும் நியாயமா? ஐயா திரைப்படத்தில் அறிமுகமானதற்கு பிறகு நடிகர் சிம்பு மட்டும் உங்களை தன் படத்தில் நடிப்பதற்கு அனுமதிக்கவில்லை என்றால் தற்போது முன்னணி நடிகையாக உங்களால் வந்திருக்க முடியுமா?

அந்த படத்தில் மட்டும் நீங்கள் சிம்புவுடன் நடிக்கவில்லை என்றால் சினிமாவில் இப்போது இருந்திருக்கவே மாட்டீர்கள். அப்படித்தான் உங்கள் நிலைமை மாறி இருக்கும். இப்படி தனது ஆரம்ப காலகட்டத்தில் உங்களை கைப்பிடித்து தூக்கி விடுவதற்கு உதவி செய்த சிம்புவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார். மேலும் பேசிய அவர் ஒரு பொது நிகழ்ச்சிக்கு நயன்தாரா வந்திருந்தார்.

அந்த நிகழ்ச்சி தொடங்கி சிறிது நேரம் கழித்து சிம்பு வர போவதாக தகவல் வெளியானது. இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த நயன்தாரா உடனே அந்த நிகழ்ச்சி மேனேஜரிடம் சென்று ஒன்று இந்த நிகழ்ச்சியில் நான் இருக்க வேண்டும். இல்லையென்றால் அவர் இருக்க வேண்டும் என்று கறாராக கூறிவிட்டாராம்.

இதையும் படிங்க: நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்குதான்னு இருந்தா!… மீம்ஸால் கடுப்பான விக்கி!…

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மேனேஜர் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து சிம்புவிடம் இந்த விஷயத்தை பொய் சொல்ல உடனே அவரும் அவர்களே இருக்கட்டும் நான் சென்று விடுகிறேன் என்று கூறி அங்கிருந்து கிளம்பி விட்டாராம். இதனால் உங்கள் மீது அல்லது உங்களது நிகழ்ச்சி மீது எனக்கு எந்த கோபமும் இல்லை கவலைப்படாதீர்கள் என்று கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதுதான் நீங்கள் காட்டும் நன்றி கடனா? ஒரு மனிதனை பொது நிகழ்ச்சியில் வைத்து இப்படி அவமானப்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தனுஷ் செய்ததை குறித்து பேசலாமா? என்று காட்டமாக விவரித்து இருக்கின்றார்

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.