என்னது நான் வில்லனா?… இத யாரு கிளப்பிவிட்டதுனு தெரியும்… விஷால் இப்படி சொல்லிட்டாரே…

X

நடிகர் விஷால் சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருப்பதாக வெளிவந்த தகவலுக்கு பதிலளித்து இருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் கடைசியாக ஹரி இயக்கத்தில் ரத்தம் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அதனை தொடர்ந்து எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

தற்போது தற்போது எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, கருடன் ஆகிய திரைப்படங்களை இயக்கி பிரபலமான துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. கருடன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு லெஜன்ட் சரவணாவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகின்றார் துரை செந்தில்சாமி.

இந்த திரைப்படத்தை முடித்துவிட்டு விஷாலை வைத்து படம் இயக்கப்போவதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவி வருகின்றது. இதற்கிடையில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிகர் விஷால் நடிக்கப் போவதாக பேச்சு அடிபட்டது. அதற்கு தற்போது விஷால் பதில் அளித்து இருக்கின்றார்.

இதையும் படிங்க: விஜயாவால் மீனா மீது விழுந்த பழி… சுயநலவாதியான பாக்கியா குடும்பம்… தங்கமயிலுக்கு பிரச்னை..

சுதா கோங்குரா இயக்கத்தில் புறநானூறு திரைப்படத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் அவர் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அந்த திரைப்படத்திலிருந்து விலகிவிட்டார். அதனை தொடர்ந்து இப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்து இருக்கின்றார். மேலும் இந்த திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் முதலில் பகத் பாஸிலை அணுகி இருக்கிறார்கள்.

அவருக்கும் கால்ஷீட் பிரச்சினை இருந்த காரணமாக நிவின்பாலி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. பின்னர் தமிழ் சினிமாவில் விஷாலிடம் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக செய்தி ஒன்று பரவி வந்தது. இந்த செய்தியை நடிகர் விஷால் மறுத்திருக்கின்றார். இது தொடர்பாக அவரிடம் கேள்வி எழுப்பிய போது ‘அவர் நிச்சயமாக இல்லை. வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு நான் இப்போது தயாராக இல்லை.

இதையும் படிங்க: கோட் கேமியோ ரோல்… அந்த டயலாக் எப்படி வந்ததுன்னு தெரியுமா? SK. சொன்ன சூப்பர் தகவல்

என்னுடைய படங்களில் மட்டுமே நான் கவனம் செலுத்தி வருகின்றேன். மேலும் இந்த செய்தியை யார் கிளப்பிவிட்டது என்பது எனக்கு நன்றாக தெரியும். 20 வருடங்கள் கழித்து என்னை வில்லனாக பார்க்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். ஆனால் இதற்கு நான் தற்போது தயாராக இல்லை. இதனால் அவர்கள் அமைதியாக இருந்தால் நல்லது’ என்று கூறியிருக்கின்றார். நடிகர் விஷால் யாரை குறிப்பிட்டு பேசுகிறார் என்பது தெரியவில்லை. யார் அந்த நபர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.