சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து கடந்த 15ம் தேதி வெளியாகி வசூலை குவித்து வரும் திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் முதல் பாகம் 2023ம் வருடம் வெளியாகி சூப்பர் ஹிட் அடுத்த நிலையில் தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியிருக்கிறது.
ரஜினி ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ, எது அவர்களை முழுமையாக திருப்திப்படுத்துமோ அதையெல்லாம் கவனத்தில் கொண்டு கதை, திரைக்கதை மற்றும் காட்சிகளை அமைத்து கைதட்டலை வாங்கியிருக்கிறார் நெல்சன். ரஜினியும் கதையைப் புரிந்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்.
குறிப்பாக இசையமைப்பாளர் அனிருத் மாஸான பின்னணி இசையை கொடுத்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார்.கடந்த இரண்டு நாட்களில் ஜெயிலர் 2 திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.220 கோடி வசூலை தாண்டி விட்டதாக சொல்லப்படுகிறது. எப்படியும் இந்த திரைப்படம் 5 நாட்களில் 600 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள். இந்நிலையில், சத்தமே இல்லாமல் ஜெயிலர் 2 திரைப்படம் ஒரு சாதனையை படைத்திருக்கிறது.
இந்திய சினிமாவில் முதல் முறையாக 7 ஃபார்மேட்களில் ஜெயிலர் 2 படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. அதாவது IMAX, 4DX, D-BOX, DOLBY, EPIQ, HDR BY BARC, HDR FOR LED CINEMA ஆகிய ஏழு Format-களில் இந்த படம் திரையிடப்பட்டிருக்கிறது.







