ஜெயிலர்2 சூப்பர் ஹிட்!.. அடுத்து யாரை வைத்து படமெடுக்கிறார் நெல்சன்?…

X
ஜெயிலர்2 சூப்பர் ஹிட்!.. அடுத்து யாரை வைத்து படமெடுக்கிறார் நெல்சன்?…

விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கி வந்தவர் நெல்சன் திலிப்குமார். பல வருடங்களுக்கு முன்பு சிம்பு, ஹன்சிகாவை வைத்து வேட்டை மன்னன் என்கிற திரைப்படத்தை தொடங்கினார். ஆனால் அந்த திரைப்படம் பாதியிலேயே நின்று போனது. அதன்பின் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளை இயக்கப் போய்விட்டார்.

சில வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அந்த திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்தது.
அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர், விஜயை வைத்து பீஸ்ட் ஆகிய திரைப்படங்களை நெல்சன் இயக்கினார். ஆனால் ரஜினியை வைத்து அவர் இயக்கிய ஜெயிலர் 2 திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து ரூ.630 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது..

தற்போது ஜெயிலர் 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. படம் வெளியாகி இரண்டு நாட்களில் ரூ.250 கோடி வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. எப்படியும் ஜெயிலர் 2 திரைப்படம் 700 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள்.

இதையடுத்து பல பெரிய நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் பார்வை நெல்சன் பக்கம் திரும்பியிருக்கிறது. ஆனால், ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படம், சித்தாரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம், அதேபோல் கொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் என மூன்று படங்களை நெல்சன் கையில் வைத்திருக்கிறார். இதில் எந்த படத்தை அவர் துவங்கப்போகிறார் என்பது தெரியவில்லை..

நேற்று உதயநிதியின் மகன் இன்பநிதி ரஜினியை சந்தித்து பேசியிருக்கிறார். ரஜினி,கமல் இணைந்து நடிக்கும் படத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர். எனவே ரஜினி – கமல் இணையும் படத்தை நெல்சன் அடுத்து இயக்கப் போகிறாரா என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.