ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படம், முதல் பாகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து இடங்களிலும் பிளாக்பஸ்டர் ரெஸ்பான்ஸ் குவிந்து வரும் நிலையில், பாக்ஸ் ஆபீஸிலும் பட்டையை கிளப்புகிறது. முதல் நாள் வசூலே 125 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெயிலர் படத்தின் ஓடிடி உரிமத்தைப் பெரிய தொகை கொடுத்து வாங்கிய அமேசான் பிரைம் வீடியோ, ஜெயிலர் 2 படத்தையும் வாங்கியுள்ளது. இதன் டிஜிட்டல் டீல் சுமார் ரூ.160 கோடிக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
ஜெயிலர் 2 ஓடிடியில் வரும் நவம்பர் 12ம் தேதி வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. ஜெயிலர் 2 படம் ரிலீஸ் ஆன 4 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியாக வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில் தான் இந்தியில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் ஜெயிலர் 2வை வாங்கவில்லை என்கின்றனர்.
ஆனால், இந்தியில் வரும் 40 கோடி வசூலை விட 160 கோடி லாபம் தான் முக்கியம் என சன் பிக்சர்ஸ் எடுத்த முன்னெடுப்பு சரியே என்கின்றனர்.







