ஜெயிலர் 2 ஜெயிச்சுடுச்சு!.. சேயோன் பட நடிகர் சீமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

X
ஜெயிலர் 2 ஜெயிச்சுடுச்சு!.. சேயோன் பட நடிகர் சீமான் என்ன சொல்லியிருக்காரு பாருங்க!..

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் வெற்றியைப் பாராட்டி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரசிகர்களின் பேரன்பையும் வரவேற்பையும் பெற்று இப்படம் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் சினிமாவில் நடிக்கத் தொடங்கி ஐம்பது ஆண்டுகளைக் கடந்தும் தனது முதல் படத்தில் நடித்தபோது இருந்த அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் இன்று வரை ஒவ்வொரு படத்திலும் ஈடுபட்டு வருகிறார். பல தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்திருப்பதே அவரது தொடர்ச்சியான வெற்றிக்கு காரணமாகும்.

புகழின் எல்லையை அடைந்த பிறகும், நான்கு தலைமுறை இயக்குநர்களுடன் பணியாற்றிய பின்பும் ஒவ்வொரு படத்தையும் புதிய ஆரம்பமாக நினைத்து ரஜினிகாந்த் உழைத்து வருகிறார். காலமும் தொழில்நுட்பமும் மாறினாலும், மக்களுடன் ரஜினிகாந்த் உருவாக்கியுள்ள அன்பு தொடர்ந்து வலுவாகி வருகிறது என பாராட்டினார்.

மேலும், ஜெயிலர் 2 படத்தின் வெற்றிக்காக ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் சீமான் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.