முதலமைச்சர் விஜய் போறாரோ இல்லையோ!.. முதல் ஆளா நவராத்திரி விழாவில் ஆஜரான சிவகார்த்திகேயன்!..

X
முதலமைச்சர் விஜய் போறாரோ இல்லையோ!.. முதல் ஆளா நவராத்திரி விழாவில் ஆஜரான சிவகார்த்திகேயன்!..

கேரளாவில் நடைபெற்ற கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நவராத்திரி கொண்டாட்டத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், வரலட்சுமி சரத்குமார், அபிராமி உள்ளிட்டோர் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் நவராத்திரியை முன்னிட்டு பிரம்மாண்டமாக கொண்டாடி வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு நவராத்திரியில் நடிகர் நாகார்ஜுனா, நடிகை மாளவிகா மோகனன், ஸ்ரீலீலா, நடிகர் பாபி தியோல், சைஃப் அலி கான், சாரா அலி கான் உள்ளிட்ட பலரும் விழாவில் கலந்துக்கொண்டனர்.

பாரம்பரிய உடைகளில் வந்திருந்த பிரபலங்கள் விழாவில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் குடும்பத்துடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற சிவகார்த்திகேயனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன.

திரைப்பிரபலங்கள் பலரும் ஒரே இடத்தில் கலந்துகொண்ட இந்த நவராத்திரி விழாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரச்கர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. முதலமைச்சர் விஜய்யும் இதில் பங்கேற்க கேரளா செல்லப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், அதீத மழை காரணமாக அவர் செல்வாரா? மாட்டாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. கல்யாண் ஜுவல்லர்ஸ் சார்பாக முதலமைச்சர் விஜய்க்கு பிரத்யேக ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டுள்ளது.