023ம் வருடம் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் அடுத்து வசூலை அள்ளிய நிலையில் கடந்த 15ம் தேதி ஜெயிலர் 2 திரைப்படம் உலகமெங்கும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்க ரஜினிகாந்த், சூரஜ் வெஞ்சரமுடு, எஸ்.ஜே.சூர்யா, .நமோ நாராயணன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். மேலும் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன், விஜய் சேதுபதி ஆகியோரும் கேமியா படத்தில் நடித்திருந்தனர்.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
ஜெயிலர் 2 படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. ரஜினி ரசிகர்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் அசத்தலாக இருப்பதாக பலரும் கூறி வருகிறார்கள்.
இதனால் தியேட்டர்களில் கூட்டம் கூடுகிறது. இந்நிலையில், படம் வெளியான இரண்டு நாட்களில் இந்த திரைப்படம் ரூ.230 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் எப்படியும் இந்த நான்கு நாட்களிலேயே 500 கோடி வசூலை தாண்டி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.







