துவக்கத்தில் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து வந்தவர் இசையமைப்பாளர் தேவா. நடிகர் பிரசாந்த் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க தொடங்கினார்.
அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்து தேவாவும் பிரபலமானார். தொடர்ந்து பல படங்களுக்கு தேவா இசையமைத்தார். அவருக்கு தேனிசைத் தென்றல் என்கிற பட்டமும் கிடைத்தது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வந்த தேவா ஒரு கட்டத்தில் முன்னணி இசையமைப்பாளராக மாறி ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற நடிகர்களின் படங்களுக்கும் இசையமைக்க தொடங்கினார். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் ஆகிய படங்களுக்கு தேவா இசையமைத்திருக்கிறார்.
கடந்த பல வருடங்களில் பல புதிய இசையமைப்பாளர்கள் வந்துவிட்ட நிலையில் தேவா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போனது. ஒரு கட்டத்தில் அவர் சினிமாவில் இசையமைப்பதையே நிறுத்திவிட்டார். அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இந்நிலையில், தற்போது அவர் காலமாகிவிட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் மாரடைப்பில் உயிரிழந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு வயது 76. அவரின் மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.







