நடிகர் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் மனைவி லதாவின் சகோதர் ரவியின் மகன்தான் அனிருத். தனுஷின் படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் பிரபலமானார். அதன்பின் பல நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார்.
ஒருகட்டத்தில் ரஜினி மற்றும் விஜயின் ஆஸ்தான இசையமைப்பாளராக மாறினார். ரஜினிக்கு தர்பார், வேட்டையன், கூலி, ஜெயிலர், ஜெயிலர் 2 ஆகிய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். விஜய்க்கு கத்தி, மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்திருந்தார்.
அனிருத்துக்கு 36 வயதாகியுள்ள நிலையில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனை திருமணம் செய்து கொள்ளவிருக்கிறார். இவர்களின் திருமணம் வருகிற நவம்பர் 10ம் தேதி கிரீஸ் நாட்டில் நடைபெறவிருக்கிறது. அதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொள்கிறார்கள்.

அதன்பின் நம்பர் 21ம் தேதி சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இதில் திரையுலக சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள்.

இந்நிலையில்தான், கலாநிதி மாறன், அவரின் மனைவி மற்றும் அனிருத் ஆகிய மூவரும் தமிழக முதல்வர் மற்றும் முன்னாள் நடிகர் ஜோசப் விஜயை நேரில் சந்தித்து அவரிடம் திருமண பத்திரிகையை கொடுத்துள்ளனர். இதை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.







