தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் தேனிசை தென்றல் தேவா. நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் அறிமுகமான வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்து பல ஹிட் பாடல்கள் கொடுத்தார்.

ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் ஆகிய 3 திரைப்படங்களுக்கு தேவா இசையமைத்துள்ளார். அதில், பாட்ஷாவுக்கு அவர் கொடுத்த பின்னணி இசையும், பாடல்களும் அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பாட்ஷா படத்தின் டைட்டில் கார்டில் ரஜினி பெயர் வரும்போது அவர் கொடுத்த பின்னணி இசை ரஜினி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
எனவே, அந்த படத்திற்கு பின் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 வரை ரஜினி நடித்த அனைத்து படங்களிலும் டைட்டில் கார்டில் அதுதான் பயன்படுத்தப்பட்டது. அப்படிப்பட்ட தேவா இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். செய்தியை கேள்விப்பட்ட ரஜினி நேரில் சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது தேவாவுடன் ஏற்பட்ட அனுபவங்களையும் அவர் பகிர்ந்துகொண்டார்.







