இசையமைப்பாளர் தேவா இன்று காலை காலமான செய்தி பலரையும் உலுக்கியிருக்கிறது. 90களில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். பல இசை நிகழ்ச்சிகளையும் தேவா நடத்தியிருக்கிறார். ரஜினியின் பாட்ஷா, அண்ணாமலை, அருணாச்சலம் மற்றும் கமலின் அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார்.
மாரடைப்பு காரணமாக இன்று காலை சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தேவா கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். திரையுலகில் இசைஞானி இளையராஜா காப்புரிமை என்கிற பெயரில் பலருக்கும் நோட்டீஸ் அனுப்பினார்.
அதாவது அவரின் பாடல்களை அவர் அனுமதியின்றி யாரேனும் பயன்படுத்தினால் அதற்கு நஷ்ட ஈடு கேட்டு அவர் வழக்கு தொடர்ந்து வருகிறார். ஆனால் மறைந்த தேவா வேறு மாதிரி எண்ணம் கொண்டவர்.
இது தொடர்பாக ஊடகம் ஒன்றில் ஒருமுறை பேசியபோது ‘நான் காப்புரிமை கேட்பதில்லை.. அதை கேட்க ஆரம்பித்தால் எங்கு போய் முடிகிறது என்று தெரியாது.. கருகரு கருப்பாயி.. பஞ்சுமிட்டாய் என்ற என்னுடைய பழைய பாடல்கள் மீண்டும் படங்களில் வருவதால் சின்ன பசங்களுக்கு கூட என் பாடல் தெரிகிறது.. எனக்கு அந்த சந்தோஷமே போதும்.. நான் காப்புரிமை கேட்பதில்லை’ என்று கூறி ஆச்சரியப்படுத்தியவர்தான் தேவா.







