Jailer2 Collection: 300 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர் 2!.. 3 நாள் வசூல் அப்டேட்!…

X
Jailer2 Collection: 300 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர் 2!.. 3 நாள் வசூல் அப்டேட்!…

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்து கடந்த 15ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க நெல்சன் இயக்கியிருந்தார். 2023ம் வருடம் ஜெயிலர் படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது 2ம் பாகம் வெளியாகியுள்ளது.

முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் கூறிய நிலையில் ஜெயிலர் 2 படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று அசத்தலான வசூலை பெற்று வருகிறது. முதல் நாளில் 140 கோடி, இரண்டாவது நாளில் 100 கோடி என வசூலித்த நிலையில் தற்போது படம் வெளியாகி 3 நாட்களில் ஜெயிலர் 2 படம் உலகம் முழுவதும் ரூ.317.15 கோடி வசூலித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.

இந்தியாவில் மட்டும் இப்படம் ரூ.169.65 கோடியும், வெளிநாடுகளில் ரூ.147.50 கோடியும் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அனேகமாக ஆயுத பூஜை விடுமுற முடியும்போது ஜெயிலர் 2 படம் 500 கோடி வசூலை தாண்டியிருக்கும் என கணிக்கப்படுகிறது.