Connect with us
kasthuri

latest news

குழந்தை இருக்கிறது பிக்பாஸ் போனப்ப தெரியலயா?!. கஸ்தூரிக்கு எதிராக பொங்கும் நெட்டிசன்கள்!…

Kasthuri: நடிகை கஸ்தூரி சர்ச்சையாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். முன்ஜாமீன் மனுவினை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை அடுத்து அவருக்கு சிறை தண்டனை கிடைத்துள்ளது.

குறிப்பிட்ட ஜாதிக்கு ஆதரவாக பேசுகிறேன் என தொடர்ந்து மற்ற சமுதாயத்தினரை கஸ்தூரி வசைபாடி வந்தார். உச்சகட்டமாக தெலுங்கு பெண்கள் குறித்து இவர் சொன்ன கருத்து பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது. இவரது அநாகரிக பேச்சுக்கு முடிவு கட்ட வேண்டி காவல்துறையில் ஏராளமான புகார்கள் குவிந்தன.

இதையும் படிங்க: விஜயாவால் மீனா மீது விழுந்த பழி… சுயநலவாதியான பாக்கியா குடும்பம்… தங்கமயிலுக்கு பிரச்னை..

தெலுங்கு மக்களை இழிவாக பேசிவிட்டு அந்த மாநிலத்துக்கே அடைக்கலம் தேடி கஸ்தூரி சென்றது தான் இதில் ஹைலைட். இந்தநிலையில் அவருக்கு ஜாமீன் வழங்குவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதனின் மனைவி காமாட்சி கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அதில்,’ நடிகை கஸ்தூரியின் ஜாமீன் வழக்கை கருணையோடு அணுக வேண்டும். கஸ்தூரிக்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தை உள்ளது. சிறப்பு குழந்தையை தனி ஆளாக போராடி கஸ்தூரி வளர்த்து வருகிறார். குழந்தையின் நிலையை கருத்தில் கொண்டு அவரது வழக்கை அணுகுங்கள்,’ என ஆதரவு தெரிவித்து உள்ளார்.

kasthuri

இதைப்பார்த்த நெட்டிசன்கள் சிறப்பு குழந்தையை விட்டுவிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எப்படி சென்றார்? அப்போது எந்த பிரச்சினையும் இல்லை. பெண் குலத்தையே அவமானப்படுத்திய கஸ்தூரி போன்றவர்களுக்கு சப்போர்ட் செய்யாதீர்கள். இதுபோன்ற வழக்குகளில் பாரபட்சம் பார்க்க கூடாது,’ என வெளுத்தெடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சத்யராஜ் என்ன இவ்வளோ கறாரா இருக்காரே… கூலி படத்தில் நடக்கும் சம்பவம்

google news
Continue Reading

More in latest news

To Top