ஜெயலலிதாவுக்கு பிறகு என் மருமகள்தான்!.. தம்பி ராமையா சொன்ன அந்த விஷயம்..

Published on: November 21, 2024
jayalalitha
---Advertisement---

தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என 90களில் மிகவும் பிரபலமாக இருந்தவர்   நடிகர் அர்ஜூன். பெரும்பாலும் அர்ஜுன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பை பெற்றவர். சமீபகாலமாக வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து மேலும் தன்னுடைய இமேஜை கூட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தம்பி ராமையாவின் மகனான உமா பதியை திருமணம் செய்து இருக்கிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பிறகு உமாபதி நடிக்கும் திரைப்படம் ராஜா கிளி. அந்த படத்தின் ஆடியோ விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது தம்பி ராமையா, உமாபதி ,சமுத்திரக்கனி, அர்ஜுன் மற்றும் அவருடைய மகள் ஐஸ்வர்யா என குடும்பமாக வந்து பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கங்குவா நெகட்டிவ் விமர்சனத்தால் விஜயை வம்புக்கு இழுக்கும் பிரபல தயாரிப்பாளர்… வெளுக்கும் ரசிகர்கள்…

அப்போது தம்பி ராமையா உமாபதி பற்றியும் அவருடைய மருமகள் ஐஸ்வர்யாவை பற்றியும் பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார் . அதில் ஒரு விஷயம் அனைவரின் கவனத்தை ஈர்த்தது. அதாவது ஜெயலலிதாவுக்கு பிறகு பழமொழிகள் தெரிந்த பெண்மணி என்னுடைய மருமகள்தான் என கூறினார் தம்பி ராமையா .அந்த அளவுக்கு ஐஸ்வர்யாவுக்கு பல மொழிகள் தெரியுமாம்.

கோல்ட் மெடல் லிஸ்ட்டாம். இதற்கு முன் நடிகைகளில் ஜெயலலிதா மட்டுமே பல மொழிகள் தெரிந்த நடிகையாக இருந்திருந்தார். அவருக்கு பதில் என்னுடைய மருமகள் தான் என மிகப் பெருமையாக பேசி இருந்தார் தம்பி ராமையா. இதைக் கேட்டதும் மேடையில் இருந்த அர்ஜுன் சந்தோஷத்தில் சிரித்துக் கொண்டார். தற்போது அர்ஜுன் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்து மகளை வைத்து ஒரு படத்தையும் இயக்கினார். மேலும் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் அர்ஜுன்.

இதையும் படிங்க: நேருக்கு நேர் சந்தித்த தனுஷ்-ஐஸ்வர்யா!… வரும் நவம்பர் 27 தீர்ப்பு?!… என்ன ஆக போதோ?…

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.