இதையெல்லாம் கேட்க முடியல!.. யுடியூப் ரிவ்யூக்கு மட்டும் தடையா?!… பொங்கும் புளூசட்ட மாறன்!…

Published on: November 22, 2024
blue satta
---Advertisement---

முன்பெல்லாம் சினிமா விமர்சனங்கள் என்பது பத்திரிக்கைகளில், வார இதழ்களில் எழுதுவார்கள். இதில், ஆனந்த விகடன் நமது படத்திற்கு எவ்வளவு மார்க் போடுகிறார்கள் என பெரும்பாலான நடிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். பல நடிகர்களின் வளர்ச்சிக்கு ஆனந்த விகடனின் விமர்சனம் முக்கிய காரணமாக இருந்திருக்கிறது.

ஆனால் இப்போதெல்லாம் யுடியூப் வந்துவிட்டது. எல்லோரின் கையில் ஸ்மார்ட்போன் மற்றும் இண்டர்நெட் கனெக்‌ஷன் வந்துவிட்டதால் சினிமா தொடர்பான செய்திகளையும், விமர்சனங்களையும் எல்லோரும் செல்போனிலேயே பார்த்துவிடுகிறர்கள். எனவே, 10 வருடங்களுக்கு முன்பே புது படங்கள் தொடர்பான விமர்சனங்களை சிலர் யுடியுப்பில் சொல்ல துவங்கினார்.

இதையும் படிங்க: ‘வேதம் புதிது’ படத்தில் இருந்த சென்சார் பிரச்சினை.. நான் ஆணையிட்டால் ரேஞ்சுக்கு மாஸ் காட்டிய எம்ஜிஆர்

இப்போது இது அதிகரித்துவிட்டது. இதில், புளூசட்ட மாறன் போன்றவர்கள் விமர்சனம் என்கிற பெயரில் புதிய படங்களை கிழித்து தொங்க விட துவங்கினார். இது படத்தின் வசூலை பாதித்தது. ஏனெனில், புளூசட்ட மாறன் விமர்சனத்தை பார்த்துவிட்டு படத்தை பார்க்கலாமா வேண்டாம என முடிவெடுக்கும் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

ஒருபக்கம், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் கருத்துக்கேட்டு பல யூடியுப் சேனல்கள் ஒளிபரப்பி வருகிறது. ஆனால், படம் நன்றாக இருந்தால் அதுவே படத்திற்கு விளம்பரமாக அமையும். அதுவே, படம் நன்றாக இல்லை என ரசிகர்கள் சொன்னால் படத்தின் வசூலையே அது பாதிக்கும்.

இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்களுக்கு இப்படி ரசிகர்கள் சொன்ன எதிர்மறையான விமர்சனங்கள் அப்படங்களின் வசூலை கடுமையாக பாதித்தது. அதிலும் கங்குவா படத்தின் கிடைத்த மோசமான விமர்சனங்கள் அப்படத்தின் வசூலை மொத்தமாக காலி செய்து விட்டது.

இதையடுத்து, தியேட்டருக்கு உள்ளேயும், வெளியேயும் இனிமேல் யுடியூப் சேனல்களை அனுமதிக்கக் கூடாது என தயாரிப்பாளர் சங்கமும், தியேட்டர் அதிபர் சங்கமும் முடிவெடுத்திருக்கிறது. இந்நிலையில், யுடியூப் விமர்சகர் புளூசட்டமாறன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.

பிரபு தேவா நடிப்பில் சக்தி சிதம்பரம் இயக்கிய ஜாலியோ ஜிம்கானா படம் இன்று ரிலீஸ். இதில் போலீஸ்காரன் எனும் பாடலில் வரும் வரிகள் இதுதான்:

போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியால அடிப்பான்.. டாக்டர் ஊசியால குத்துவான்.. டிரைவர் ஹார்ன் அடிப்பான்.. வாத்தி முட்டி போட சொல்லுவான்… பழக்கடைக்காரன் உரிச்சி பாப்பான்..

தியேட்டருக்கு வெளியே தரமற்ற விமர்சனம் செய்யக்கூடாது என கொந்தளித்து அதற்கு தடை போட துடிக்கும் திரையுலக ஜாம்பவான்கள் தியேட்டருக்கு உள்ளேயே ஓடும் இந்த பாடலின் தரம் பற்றி வாயை திறக்காமல் இருப்பது ஏன்?.. ஆகவே மக்களே.. இந்த தரமான பாடலை கொண்ட படத்தை அனைவரும் பார்த்து பாசிடிவ் விமர்சனம் மட்டும் செய்யுங்கள். நூறு பேரின் உழைப்பு, பலகோடி முதலீடு போட்டுள்ளார்கள். ஆதரவு தாருங்கள்’ என நக்கலடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ஜஸ்ட் மிஸ்ஸில் எஸ்கேப்பான ஆண் போட்டியாளர்!… அப்ப இந்த வாரம் வெளியேறப்போவது இவரா?!…

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.