அப்போ அது தப்புன்னு தோணல!… சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்!… மனம் திறந்த ஆர்ஜே பாலாஜி!…

Published on: November 22, 2024
rj balaji
---Advertisement---

ஆர்.ஜே பாலாஜி சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டது குறித்து மனம் திறந்து பேட்டியில் பேசியிருக்கின்றார்.

தமிழ் சினிமாவில் ஆர்ஜே வாக அறிமுகமாகி பின்னர் காமெடி நடிகர், ஹீரோ, இயக்குனர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு திறமைகளுடன் வளம் வருபவர் ஆர்.ஜே பாலாஜி. தமிழ் சினிமாவில் எல்கேஜி, மூக்குத்தி அம்மன், ஜில் ஜங் ஜக், தேவி, சிங்கப்பூர் சலூன், நானும் ரவுடிதான் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

இதையும் படிங்க: பாலிவுட்டிலே டேரா போட்ட அட்லீ!.. அடுத்த படம் இந்த கான் நடிகருடனா?!.. அதிர்ஷ்டக்காத்து பிச்சிக்கிட்டு அடிக்குதே!…

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால் மூக்குத்தி அம்மன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் இணைந்து சூர்யா 45 என்ற திரைப்படத்தை இயக்குவதற்கு கமிட்டாகி இருக்கின்றார். இது தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க இருக்கின்றார். கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும் திரிஷாவும் இணைந்து இந்த திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்கள். தன்னுடைய இயக்கம் மட்டுமல்லாமல் பிற இயக்குனர்களின் திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி நடித்து வருகின்றார் ஆர் ஜே பாலாஜி.

அந்த வகையில் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். மத்திய சிறைச்சாலையை மையமாக வைத்து ஒரு பீரியட் படமாக உருவாகி இருக்கின்றது. இப்படத்தில் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், சோபா சக்தி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

இந்த திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. இதனால் படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஆர்.ஜே பாலாஜி ஈடுபட்டுவருகிறார். இதற்காக பல youtube நிகழ்ச்சிகளுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார். அதில் தன் வாழ்வில் நடந்த பல சுவாரசிய சம்பவங்களை பகிர்ந்து வருகின்றார். அப்படி ஒரு பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் தான் மன்னிப்பு கேட்டதாக கூறியிருக்கின்றார்.

இதையும் படிங்க: நான் சரக்கடிக்கிறதை நிறுத்திட்டேன்!.. காரணம் இதுதான்!.. ஓப்பனா பேசிய விஜய் ஆண்டனி!..

அதாவது 2012 மற்றும் 13 தொலைக்காட்சியில் அவார்டு நிகழ்ச்சிகளை கலாய்க்கும் சோவை அவர் செய்து வந்திருக்கின்றார். அந்த அவார்டு நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் எமோஷனலாக பேசியிருப்பார். அதனை கலாய்த்து ஆர்.ஜே பாலாஜி பேசியிருப்பார். அந்த ஷோ செய்த போது தனக்கு அது தவறாக தெரியவில்லை. ஆனால் அந்த நிகழ்ச்சியை டிவியில் ஒளிபரப்பான போது தனக்கு தவறாக தெரிந்ததால் சிவகார்த்திகேயனுக்கு போன் செய்து தான் மன்னிப்பு கேட்டதாக ஆர்.ஜே பாலாஜி அந்த பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார்.

ramya suresh

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.