Cinema News
யார்ரா இருந்தா என்னடா? ஃபோன வை.. நைட் 1.30மணிக்கு போன் செய்த விக்கியை திட்டிய நடிகர்
போடா போடி படத்தின் மூலம் இயக்குனராகா அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதற்கு முன்பு வரை உதவி இயக்குனராக பல படங்களில் பணியாற்றியிருக்கிறார். இயக்குனராக மட்டுமில்லாமல் சிறந்த பாடலாசிரியராகவும் இருந்து வருகிறார் விக்னேஷ் சிவன். இவர் அடிப்படையில் சிறந்த கவிதை ஞானம் படைத்தவராகவும் இருக்கிறார். ஜெயிலர் படத்தில் அமைந்த ரத்தமாரே பாடல் அனைவரையும் கவர்ந்தது.
சிறந்த பாடலாசிரியர் விருதை அந்த பாடலுக்காக விக்னேஷ் சிவன் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் ஒரு நடிகருக்கு மிட் நைட்டில் போன் செய்து திட்டு வாங்கிய சம்பவமும் அரங்கேறியிருக்கிறது. அவர் வேறு யாருமில்லை ஆர் ஜே பாலாஜி. போடா போடி சமயத்தில் ஆர் ஜே பாலாஜி ஆர்ஜேவாக பணிபுரிந்தார். அப்போது பாலாஜியிடம் பேச வேண்டும் என்பதற்காக நைட் 1.30 மணிக்கு போன் செய்து ‘ஹலோ நான் விக்னேஷ் சிவன் பேசுகிறேன்’ என ஆரம்பித்திருக்கிறார்.
இதையும் படிங்க: வெற்றிமாறனை அழவைத்த விஜய்சேதுபதி?!.. விடுதலை 2 திரைப்படத்தில் நடந்த சம்பவம்!.. ஓ இதான் விஷயமா!…
‘யார்ரா இருந்தா என்ன? ஃபோன வைடா’ என சொல்லி ஆர் ஜே பாலாஜி கட் பண்ணிவிட்டாராம் .ஏனெனில் வீட்டுக்கு போய்விட்டால் பாலாஜி போன் பயன்படுத்தமாட்டாராம். அதுவும் மனைவி குடும்பம்னு இருக்கும் போது மிட் நைட்டில் போன் வந்தால் டென்ஷன் ஆகிவிடுவேன் என ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். மேலும் அந்த நேரத்தில் விக்னேஷ் சிவன் பெருசா யாருக்கும் தெரியாது.
அதனால் மறு நாள் மறுபடியும் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து பேசினாராம் ஆர் ஜே பாலாஜி. பதிலுக்கு விக்னேஷ் சிவன் ஒன்றும் சொல்லவில்லையா என்று கேட்ட போது ‘அவர் அன்பாலேயே அடிப்பார்’ என ஆர் ஜே பாலாஜி கூறினார். ஏனெனில் உதாரணமாக அவர் காலை மிதித்து நாம் சாரி கேட்காமல் போனால் ரெண்டு பக்க மெசேஜை கவிதையால் டைப் செய்து என் காலை மிதித்து சாரி கேட்காமல் போனீர் என்று சொல்லக் கூடிய ஆள்.
இதையும் படிங்க: கார்த்தி மாதி்ரி ஒருத்தன் சான்ஸே இல்ல! யார்கிட்டயும் நான் பார்த்ததில்ல!.. நெகிழும் நெப்போலியன்!..
ஐய்யோ இதுக்கு பத்து தடவை சாரி கேட்டிருக்கலாம் என்று தோன்றும். அப்படி அன்பாலேயே அடிப்பார் என்று ஆர் ஜே பாலாஜி கூறினார். தற்போது ஆர் ஜே பாலாஜி சூர்யாவை வைத்து சூர்யாவின் 45வது படத்தை இயக்க இருக்கிறார். அதுதான் இப்போது பரபரப்பாக பேசப்படுகிறது.