Cinema News
கங்குவா படத்தின் முதலை ஃபைட் சீன்!.. பிரம்மாண்டமா இருக்கே!.. இதுக்கு பின்னாடி இவ்வளவு உழைப்பா?!..
கங்குவா திரைப்படத்தில் வரும் முதலை சண்டைக்காட்சி எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பான மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கங்குவா. இந்த திரைப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கியிருந்தார். மேலும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கும் இசையமைத்திருந்தார்.
இதையும் படிங்க: சாய்பல்லவி கூட SK நடிப்பதில் சிக்கல்… பிரபலம் சொல்லும் புதுத்தகவல்
நடிகர் சூர்யாவுடன் இணைந்து பாபி தியோல், திஷா பதானி, கருணாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் இப்படத்தில் நடித்திருந்தார்கள். கிட்டத்தட்ட கடந்த இரண்டு வருடங்களாக இந்த திரைப்படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இப்படம் சர்வதேச அளவில் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசான நிலையில் தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்த படத்திற்காக படக்குழுவினர் அதிகம் மெனக்கடல்களை செய்திருந்த போதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தவறிவிட்டது. படத்தில் பல லாஜிக் மீறல்கள் இருந்ததாகவும், திரைக்கதையில் சிறுத்தை சிவா இன்னும் கவனம் செலுத்தி இருக்க வேண்டும் எனவும், தேவி ஸ்ரீ பிரசாந்தின் இசை மிகுந்த இரைச்சலாக இருந்தது என்று பல விமர்சனங்கள் படத்திற்கு வந்த காரணத்தால் படம் மிகப்பெரிய விமர்சனத்தை சந்தித்தது.
ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சனங்கள் என பலரும் இப்படத்திற்கு தொடர்ந்து நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வந்த காரணத்தால் படம் வசூல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டது. 2000 கோடி வசூல் செய்யும் என்று தயாரிப்பாளர்கள் நம்பி இருந்த நிலையில் படம் 200 கோடியை கூட வசூல் செய்யவில்லை என்பதுதான் உண்மை.
சிறுத்தை சிவா கடந்த இரண்டு வருடங்களாக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து இப்படத்தை இயக்கியதாக படத்தில் வேலை பார்த்த அனைவரும் கூறியிருந்தார்கள். ஆனால் படத்தின் கதை யாருக்கும் புரியவில்லை என்பதுதான் பலரின் கருத்தாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் முதலை சண்டை காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. படத்தில் சில நிமிடங்கள் வரும் இந்த சண்டை காட்சிக்காக படக்குழுவினர் 40 நாட்கள் வரை உழைத்திருக்கிறார்கள்.
இதன் மேக்கிங் வீடியோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த காட்சிக்காக சிறுத்தை சிவா மற்றும் படக்குழுவினரின் வேலைகள் மற்றும் மெனக்கடல்கள் அனைத்தும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த முதலை சண்டை காட்சிக்காக பல ஆவணபடங்களை பார்த்து ஸ்டடி செய்ததாக சிறுத்தை சிவா கூறியிருந்தார். சண்டையின் போது முதலையின் பாடி லாங்குவேஜ் மற்றும் அதன் ரியாக்ஷன் போன்றவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு இந்த காட்சியை உருவாக்கியதாக அவர் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: படம் குப்பை.. சூர்யாவை ஏன் திட்டுறீங்க? கொந்தளித்த அஜித்தின் நலம் விரும்பி
இந்த காட்சிக்காக 17 அடி நீளத்தில் முதலையின் மாடல் செய்ததாகவும், அதனை தண்ணீரில் விட்டால் அது உள்ளே சென்று விடாமல் இருப்பதற்காக தெர்மாகோல் மூலமாக அதை தண்ணீரில் செட் செய்ததாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் இவ்வளவு செய்த சிறுத்தை சிவா படத்தின் கதையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமே என்று கூறி வருகிறார்கள்.
The Wild Man vs a Wild Beast! The making of Crocodile fight scene in #Kanguva 🐊
From the World of Kanguva Ep – 3
▶️https://t.co/rXgVpobip6#KanguvaRunningSuccessfully
🔗 https://t.co/aG93NEBPMQ@Suriya_offl @thedeol @directorsiva @DishPatani @ThisIsDSP #StudioGreen… pic.twitter.com/fu3OsdQ47s— Studio Green (@StudioGreen2) November 23, 2024