Connect with us
kamal

latest news

Tamil Biggboss: மீண்டும் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்க வாய்ப்பு.. இவர் சொன்ன பிறகு நம்பலனா எப்படி?

Tamil Biggboss:  பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மொத்த,ம் 18 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் ஆரம்பத்திலேயே பல வித டிவிஸ்ட்கள் போட்டியாளர்களுக்கு காத்திருந்தது. ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்டு பிக்பாஸ் சரியான செக் வைத்தார்.

முதலில் சீசன் ரசிகர்களிடம் போதுமான வரவேற்பை பெறவில்லை. அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி எப்படி தொகுத்து வழங்கப் போகிறார் என்ற ஒரு வித எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் தன்னுடைய பாணியில் ஆரம்பம் முதலே இன்றளவு வரை போட்டியாளர்களை வச்சு செய்து வருகிறார் விஜய் சேதுபதி. இது ஒரு கட்டத்தில் போட்டியாளர்களிடம் எரிச்சலை ஏற்படுத்த கமல் அளவுக்கு விஜய்சேதுபதிக்கு உள்ளே இருக்கும் ஒரு சில ஆண் போட்டியாளர்கள் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்பதுபோல தெரிகிறது.

இதையும் படிங்க: தூக்கிவிட்டவங்களை கழட்டிவிட்டு கங்குவா பண்ணிய சூர்யா!.. இப்படியே போனா அவ்வளவுதான்!..

மேலும் நேற்று வெளியேற வேண்டிய சாச்சனா விஜய்சேதுபதியின் வற்புறுத்தலால்தான் அவர் வெளியேறாமல் லிஸ்டிலேயே இல்லாத வர்ஷினி நேற்று வெளியேற்றப்பட்டார். மகாராஜா படத்தில் இருந்து இன்னும் விஜய்சேதுபதி வெளியே வராமல்தான் இருக்கிறார். அப்பா மகள் பாசத்தால் ஓவராக ஆட்டம் போடுகிறார் என்றெல்லாம் விஜய்சேதுபதியை இன்று சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸை கமல் தொகுத்து வழங்க வாய்ப்பிருப்பதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. கமலின் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலத் துணைத்தலைவர் கோவை தங்கவேலு பிக்பாஸ் நிகழ்ச்சியை அடுத்த முறை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அமெரிக்கா சென்றதால் அவரால் பிக்பாஸ் நிகழ்ச்சியை இந்த முறை தொகுத்து வழங்க முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

vijaysethupathi

vijaysethupathi

இதையும் படிங்க: நெல்சன் வைத்த கோரிக்கை!… என்ன அல்லு அர்ஜுன் இப்படி சொல்லிட்டாரு?!.. ஷாக்கான தமிழ் ரசிகர்கள்!…

ஏற்கனவே கமல் இந்த சீசனில் இல்லாததே பெரிய குறையாக மக்கள் பார்க்கிறார்கள். ஏனெனில் போட்டியாளர்களை சரியான முறையில் கையாண்டு எப்படியும் அவர் வழிக்கு கொண்டு வந்து விடுவார். ஆனால் விஜய்சேதுபதி எல்லாவற்றையும் அசால்ட்டாக பண்ண வேண்டும் என்ற வகையில் அவருடைய மரியாதையை கெடுத்து வருகிறாரோ என்றே தெரிகிறது.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top