
நடிகர் சூர்யாவை கங்குவா திரைப்படத்தின் பிரச்சினை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா. நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் பேன் இந்தியா திரைப்படமாக வெளியானது. கடந்த இரண்டு வருடங்களாக இயக்குனர் சிறுத்தை சிவா இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவான இப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.
இதையும் படிங்க: சத்யராஜை மாத்த முடியாது… அவர் தான் ஹீரோ.. நள்ளிரவில் வாக்குவாதம் செய்த தங்கர்பச்சான்
மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலிருந்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தது. இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் அனைத்து மொழிகளிலும் மிகப்பிரமாண்டமாக பிரமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி இருந்தார்கள்.
மேடைக்கு மேடை படம் குறித்து புகழ்ந்து பேசி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்கள். ஆனால் படம் அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருந்தது. அதிலும் கடந்த இரண்டு வருடங்களாக நடிகர் சூர்யா எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் கங்குவா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார்.

அவருக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி என்கின்ற அளவில் அவரது ரசிகர்கள் கூறி வந்தார்கள். இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டாலும் கதையில் சிறுத்தை சிவா கோட்டை விட்டுவிட்டார் என்பது பலரது கருத்து. அது மட்டும் இல்லாமல் படத்தில் இருக்கும் இரைச்சல் சத்தம், படத்தில் வரும் வசனங்கள் புரியவில்லை உள்ளிட்ட பல காரணங்களால் இப்படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து இருக்கின்றது.
வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சரிவு. சரி இப்படம் முடிந்து விட்டது அடுத்து வேறு திரைப்படத்தில் கவனம் செலுத்தலாம் என்றால் கங்குவா படம் சூர்யாவை விடாமல் துரத்தி வருகின்றது. படத்தின் ரிலீஸ் சமயத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக நடிகர் சூர்யா மற்றொரு திரைப்படத்தையும் ஸ்டுடியோவின் நிறுவனத்திற்கு செய்து தருவதாக கூறி ஒப்பந்தம் செய்திருந்தார்.
இதையும் படிங்க: Pushpa 2: புரோமோஷனுக்குனு வந்தவரு.. கோடம்பாக்கத்தையே அலற விட்டாருல! அல்லு அர்ஜூனால் வந்த சோதனை
அதன் காரணமாக தான் பைனான்சியர் இந்த திரைப்படத்தை வெளியிடுவதற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில் அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி திரைப்படத்தில் சூர்யா நடிக்க உள்ள நிலையில் படத்தை முடித்துவிட்டு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு மேலும் ஒரு திரைப்படத்தை நடித்துக் கொடுக்க வேண்டும் என்று அந்த பைனான்சியர் கூறியிருக்கின்றார்.
ஆனால் நடிகர் சூர்யாவோ வெற்றிமாறன் பல ஆண்டுகளாக காத்திருப்பதாகவும் வாடிவாசல் திரைப்படத்திற்கு பிறகு வேண்டுமென்றால் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொடுக்கிறேன் என்று சூர்யா ஒப்புதல் வழங்கி இருக்கிறாராம். கங்குவா திரைப்படத்தால் பல சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகின்றார் நடிகர் சூர்யா. இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளருக்கு மட்டுமல்லாமல் நடிகர் சூர்யாவுக்கும் மிகப்பெரிய நஷ்டம் என்று சினிமா விமர்சனங்கள் கூறி வருகிறார்கள்.