சத்யராஜை மாத்த முடியாது... அவர் தான் ஹீரோ.. நள்ளிரவில் வாக்குவாதம் செய்த தங்கர்பச்சான்

by sankaran v |   ( Updated:2024-11-25 12:03:02  )
thangarbachan sathyaraj
X

thangarbachan sathyaraj

பைரவி படத்தின் இயக்குனர் எம்.பாஸ்கர். இவரது மகனும், தயாரிப்பாளருமாக இருப்பவர் பாலாஜி பிரபு. இவர் 9 ரூபாய் நோட்டு படத்துக்காக நைட் ஒன்றரை மணிக்கு நடந்த விவகாரம் பற்றி இப்படி சொல்கிறார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கும் அப்பாவுக்கும் நல்ல பிரண்ட்ஷிப் இருந்தது. 9 ரூபா நோட்டு படத்தை நாங்க ஆரம்பிச்சி இந்தப் படத்தை டிராப் பண்றதுக்குக் காரணமே அவர் தான். இந்தப் படத்தை ஆரம்பிச்சதில் இருந்து பல சிக்கல்கள் எங்களுக்கு தங்கர்பச்சானால் வந்தது. அதை எடுக்க முடியாது என்ற சூழ்நிலை வந்த போது இதற்காக ஆஸ்கர்பிலிம்ஸ் ரவிச்சந்திரன்கிட்ட நாங்க போனோம்.

Also read: கயல் முதல் மருமகள் வரை… சன் டிவியின் டிஆர்பி ஹிட் சீரியல்களின் இன்றைய புரோமோ அப்டேட்…

அப்போ அவரோட தென்றல் படம் அவருக்கிட்ட இருந்தது. அதுல தங்கர்பச்சன் தான் டைரக்டர். அப்போ ஆஸ்கர் ரவிச்சந்திரன் 'சத்யராஜிக்கு மார்க்கெட் கிடையாது. அதனால அவரைத் தூக்கிட்டு சாயாஜி ஷிண்டேவைப் போடுங்க. நான் இந்தப் படத்துக்கு பர்ஸ்ட் காப்பி எடுக்கிறேன்'னு சொன்னாரு. அது எனக்கே ஷாக்காத் தான் இருந்தது.

அப்பா 'எப்படி செட்டாகும்'னு கேட்டாரு. 'பாரதியார் படத்திலேயே அவரைத் தமிழனா ஒத்துக்கிட்டாங்க. அதனால கண்டிப்பா ஒத்துக்குவாங்க. நான் தங்கர்பச்சான்கிட்ட பேச முடியாது. நீங்க பேசுங்க'ன்னு சொல்றாரு. அப்புறம் வந்துட்டோம்.

9 rupe notu

9 rupe notu

நானும், அப்பாவும், தங்கர்பச்சானும் நைட் ஒன்றரை மணிக்கு அசோக் நகர்ல உள்ள ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஆபீஸ் கேட் வாசல்ல நின்னு பேசிக்கிட்டு இருக்கோம். அப்படி பேசும்போது 'சத்யராஜைத் தூக்கிட்டு அந்தக் கேரக்டர்ல சாயாஜி ஷிண்டேவைப் போடணும்.

அதான் கண்டிஷன்'னு அப்பா சொல்லவும் தங்கர்பச்சான் ஷாக்காகிட்டார். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். 'சத்யராஜ் தான் அதுக்கு சரியா வரும். அது கலைப்படம்'னாரு. ஆனா அதைக் கேட்கல. அதுக்கு அப்புறம் அங்க இருந்தா தங்கர்பச்சான் அழுதுருவாருன்னு நினைச்சி அங்க இருந்து அப்புறம் பேசிக்கலாம்னு நாங்க அழைச்சிட்டு வந்துட்டோம். அப்புறம் அந்தப் படம் நாங்க தயாரிக்க முடியாம டிராப் ஆகிடுச்சு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Also read: கமலுடன் இணைந்து நடிக்கும் காட்சி… 100 முறை ரஜினி சொல்லிப் பார்த்த வசனம்…! அட அந்தப் படமா?

ஆனால் இந்தப் பிரச்சனைகளுக்குப் பிறகு டாக்டர் ஏ.எஸ்.கணேசன் தயாரிக்க சத்யராஜ் ஹீரோவாக நடித்து வெளியானது அந்த ஒன்பது ரூபாய் நோட்டு. கலைப்படம் என ரசிகர்கள் வரவேற்றனர். தங்கர்பச்சான் இயக்கத்தில் 2007ல் வெளியானது.

Next Story