Cinema News
12 வருஷம் ஆச்சி.. மீண்டும் உங்களுடன்!.. விஜயோடு ஒரு மீட்டிங் போட்ட அமரன் பட இயக்குனர்…
Rajkumar periyasamy: ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக வேலை செய்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இவர் இயக்கிய முதல் திரைப்படம் ரங்கூன். 2017ம் வருடம் வெளியான இந்த படத்தில் கௌதம் கார்த்திக் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு அப்போதே நேர்மறையான விமர்சனம் இருந்தது. பல பத்திரிக்கைகள் இப்படத்தை பாராட்டி எழுதியது.
ஆனாலும், ராஜ்குமார் பெரியசாமிக்கு அடுத்த படம் இயக்கும் வாய்ப்பு வரவில்லை. அதன்பின்னர்தான் இந்திய ராணுவத்தில் வேலை செய்து தீவிரவாதிகள் சுட்டதில் மரணமடைந்த முகுந்த் வரதராஜனை பற்றி ஒரு படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை ராஜ்குமாருக்கு வந்தது.
இதையும் படிங்க: விஜய்சேதுபதி எடுத்த திடீர் முடிவு!.. அடுத்த படம் அந்த பிரபல இயக்குனருடனா?!.. இதுவும் நாவல் படமா?…
எனவே, கடந்த 4 வருடங்களாக அவரை பற்றிய தகவல்களை அவரின் குடும்பத்தினர் மற்றும் ராணுவ அதிகாரிகளிடம் பெற்று கதை, திரைக்கதையை உருவாக்கினார். இந்த கதை கமல்ஹாசனுக்கு பிடித்துப்போக அவரின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்க முன் வந்தது.
முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி வேடத்தில் சாய் பல்லவியும் நடித்தனர். வழக்கமாக நடிக்கும் ஸ்டைலில் இருந்து விலகி ஒரு புதுவிதமான நடிப்பை கொடுத்திருந்தார் சிவகார்த்திகேயன். தீபாவளிக்கு வெளியான இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று 300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது.
எனவே, முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறியிருக்கிறார் ராஜ்குமார். அடுத்து தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில், நடிகர் விஜயை சந்தித்து உரையாடியிருக்கிறார். அனேகமாக, அமரன் படத்தை பார்த்துவிட்டு ராஜ்குமாரை அழைத்து விஜய் பாராட்டி பேசியிருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்நிலையில், துப்பாக்கி பட ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தையும், இப்போது எடுத்த புகைப்படத்தையும் ஒன்றாக பகிர்ந்து ‘உங்களை நேசிக்கிறேன் விஜய் சார். நன்றி.. உங்களுக்காக தினமும் பிரார்த்தனை செய்கிறேன்.. கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.. உங்களுடன் 2வது புகைப்படம் எடுக்க 12 வருடங்கள்.. 2 மாதங்கள்.. ஒரு நாள் மற்றும் 15 மணி நேரம் ஆனது’ என எக்ஸ் தளத்தில் உருகியிருக்கிறார்.
இதையும் படிங்க: Jayam Ravi: வில்லனாக நடிக்க இத்தனை கோடியா? சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க இதான் காரணமா?