
Cinema News
நீங்க வேற லெவல்!.. அது என்னால முடியாது!.. பார்த்திபனுடன் நடிக்க மறுத்த ரஜினி!..
Published on
By
Parthiban: இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்தவர் பார்த்திபன். இயக்குனராக வேண்டும் என்பதே இவரின் ஆசையாக இருந்தது. ஒரு கதையை உருவாக்கி கமல், ரஜினி உட்பட பல நடிகர்களிடமும் சென்று கதை சொன்னார். ஆனால், அவர்கள் நடிக்க முன் வரவில்லை. அதேநேரம், தயாரிப்பாளரிடம் ‘நீங்கள் பார்த்திபனையே ஹீரோவாக போட்டு படமெடுங்கள்’ என சொன்னார் ரஜினி.
அப்படி உருவான திரைப்படம்தான் புதிய பாதை. இந்த படத்தில் பார்த்திபன் அமைத்திருந்த கதை, திரைக்கதை மற்றும் அவர் எழுதியிருந்த வசனங்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. எனவே, இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. அதன்பின் அவர் இயக்கி அவரே சில படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க: இளையராஜா மட்டும்தான் இருக்காரா!.. அப்ப வண்டியை ஓரமா விடுங்க?!.. நடிகர் சூரி பகிர்ந்த சுவாரஸ்யம்!..
அதில் சில படங்கள் ஓடவில்லை. எனவே, மசாலாவாக ஒரு கதை எழுதி அவர் இயக்கிய படம்தான் ‘உள்ளே வெளியே’. இந்த படம் சூப்பர் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. எதையும் வித்தியாசமான கோணத்தில் யோசிப்பவர்தான் பார்த்திபன். படமெடுத்தாலும் சரி, கவிதை எழுதினாலும் சரி, மேடையில் பேசினாலும் சரி.. எதையும் வித்தியாசமாக செய்வார்.
இதனாலேயே ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடிக்கும். ஒருகட்டத்தில் காமெடி கலந்த வில்லன் வேடங்களில் நடிக்க துவங்கினார். அப்படி அவர் நடித்து வெளியான நானும் ரவுடிதான் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. நடிகை சீதாவை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார்.
சினிமாவில் புதுப்புது முயற்சிகளை செய்து பார்ப்பவர் பார்த்திபன். ஒரு கதாபாத்திரம் மட்டும் நடித்து ஒத்த செருப்பு என்கிற படத்தை எடுத்தார். ஒரே ஷாட்டில் இரவின் நிழல் என்கிற படத்தை இயக்கினார். இவருக்கும் ரஜினிக்கும் நல்ல நட்பு உண்டு. ரஜினியை வைத்து ஒரு காமெடி படம் எடுக்க வேண்டும் என்பது இவரின் ஆசையாக இருந்தது. ஆனால், இப்போது வரை அது நடக்கவில்லை.
#image_title
இதுபற்றி ஊடகமொன்றில் பேசிய பார்த்திபன் ‘40 நாட்களுக்கு ஒருமுறை ரஜினி சார் என்னை அழைத்து பேசுவார். அப்போதெல்லாம் விடிய விடிய பேசிக்கொண்டிருப்போம். நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிப்போம். அந்த படத்தை நீங்களே இயக்குங்கள் என சொல்வார். உள்ளே வெளியே படத்தை அவருக்கு போட்டு காட்டிய பின் வீட்டிற்கு அழைத்தார்.
‘நீங்க செமயா நடிக்கிறீங்க. உங்களோடு சேர்ந்து நடிச்சா நான் காலி. நான் ரொம்ப எச்சரிக்கையான நடிகர். நான் நடிச்சா நீங்க கேமராவுக்கு பின்னாடி மட்டும்தான் இருக்கணும்’ என சொல்லிவிட்டார். நான் எவ்வளவு சொல்லியும் அவர் கேட்கவில்லை’ என பார்த்திபன் பகிர்ந்து கொண்டார்.
இதையும் படிங்க: Viduthalai part2: விடுதலை2 டிரைலரில் விஜயை சீண்டிய வெற்றிமாறன்… இதெல்லாம் நியாயமா கொதிக்கும் ஃபேன்ஸ்…
TVK Stampede: விஜயின் கரூர் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு பிரச்னையில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்து இருக்கும் நிலையில், பலர்...
Vijay TVK: நேற்று கரூரில் நடந்த அந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கின்றது. கரூரில் தனது பரப்புரையை நடத்துவதற்காக...
Tvk Stampede: தவெக தலைவர் விஜயின் கட்சி கூட்டத்தில் நடந்த தள்ளுமுள்ளுவில் சாவு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர்...
Karur: தற்போது தமிழ் நாட்டு அரசியல் களமே பரபரப்பாக இருக்கின்றது.ஒட்டுமொத்த ஆளுங்கட்சி அமைச்சர்களும் கரூரை நோக்கி படையெடுத்திருக்கின்றனர். நேற்று கரூரில் நடந்த...
TVK Vijay: நேற்று ஒரு பெரிய துயர சம்பவம் தமிழ் நாட்டையே உலுக்கியது. தவெக தலைவர் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணமாக ஒவ்வொரு...