மஞ்சுவாரியர் பெயரை சொல்லும்போது இனித்தது, அதுவே உதவி இயக்குனர்களின் பெயரை சொல்லும் போது வெற்றிமாறனுக்கு கசக்கின்றதா என்று அந்தணன் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கி ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். தங்களுக்கு பிடித்த நடிகர்களின் படங்களுக்கு ரசிகர்கள் செல்வதை பார்த்திருப்போம். இயக்குனருக்காக படத்திற்கு ரசிகர்கள் செல்வார்கள் என்றால் அது வெற்றிமாறனுக்காக தான்.
ஒவ்வொரு படத்திலும் தனது வித்தியாசமான கதைக்களத்தின் மூலமாக அனைவரையும் கவர்ந்தவர். இவர் இயக்கத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம் விடுதலை. சூரி, விஜய் சேதுபதி, சேர்த்தன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்தது. இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த காரணத்தால் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை படக்குழுவினர் இயக்குவதற்கு முடிவு செய்தார்கள்.
இதையும் படிங்க: Biggboss Tamil: பொண்டாட்டிக்கிட்ட கேட்டாவது வந்து இருக்கலாம் ப்ரோ… பிக்பாஸ் வீட்டுக்குள் காணாமல் போன போட்டியாளர்…
அந்த வகையில் விடுதலை 2 திரைப்படமும் எடுத்து முடிக்கப்பட்டு வரும் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார்.
மேலும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருக்கின்றார். இப்படத்தில் இவரது இசையில் வெளியான பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இப்படத்தின் ஆடியோ லான்ச் சென்னையில் நடைபெற்றது. அதில் மஞ்சுவாரியரை தவிர்த்து இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, சூரி, இளையராஜா என அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த ஆடியோ லான்ச்சில் கலகலப்பான பல விஷயங்கள் நடைபெற்றது .அது மட்டும் இல்லாமல் நடிகர் சூரியை மேடையில் வைத்தே இளையராஜா கலாய்த்து இருப்பார். நீ காமெடியன் தானே உன்னை ஹீரோவாகியதே வெற்றிமாறன் தான். இதுவே பெரிய காமெடி இல்லையா? என்று அவர் பேசியது வெற்றிமாறன் கோபப்பட்டு மேடையில் இருந்து சென்றது என அனைத்தும் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது.
இதில் வெற்றிமாறன் பேசிக் கொண்டிருந்தபோது மஞ்சுவாரியரை மறந்து விட்டாரே என்று அவரின் உதவியாளர் வெற்றிமாறனுக்கு ஞாபகப்படுத்த உடனே மஞ்சுவாரியரை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருந்தார். நிகழ்ச்சிக்கு வந்த ஒருவரையும் மறந்து விடாமல் அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார் வெற்றிமாறன். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் வெற்றிமாறன் கோபப்பட்டது குறித்து சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கின்றார்.
அதில் அவர் தெரிவித்திருந்ததாவது: ‘மஞ்சுவாரியரை மறந்த நீங்கள் அவரின் பெயரை சொன்னதும் அவரைப் பற்றி சில நிமிடம் பேசினீர்கள். அதுவே உதவி இயக்குனர்களின் பெயர்களை கூறியிருந்தால் பிரச்சனையே இல்லை. அதை சொல்ல அவருக்கு என்ன தயக்கம். உதவி இயக்குனர்களின் அதிகபட்ச ஆசையே இது போன்ற நிகழ்ச்சிகளில் தங்களது பெயர்களை சொல்லி பாராட்டுவார்கள் என்பது தான்.
இதையும் படிங்க: சிவராஜ்குமாருக்கு இப்படி ஒரு நிலைமையா? அப்போ ஜெயிலர் 2 நிலைமை?
அது மட்டும் இல்லாமல் நடிகர் விஜய் சேதுபதி ரசிகர்களை பார்த்து டேய் என்று பேசுவது சரி கிடையாது. ரொம்ப திமிராக தெரிகின்றது. ரசிகர்களும் பதிலுக்கு விஜய் சேதுபதியை பார்த்து டேய் என்று சொன்னால் அவர் சும்மா இருப்பாரா? மஞ்சு வாரியருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வெற்றிமாறன் அவரிடம் பல வருடங்களாக வேலை பார்க்கும் உதவி இயக்குனர்களின் பெயர்களை மேடையில் வைத்து சொன்னால் என்ன குறைந்து போவாரா? என்று கேள்வி எழுப்பி இருக்கின்றார்.
