100 ஆண்டுகளாக யாருமே செய்யாத சாதனை… தட்டித் தூக்கிக் கெத்து காட்டிய இளையராஜா

Published on: November 29, 2024
ilaiyaraja
---Advertisement---

இசைஞானி இளையராஜா 100 ஆண்டுகளில் தன்னைப் போல இந்திய சினிமாவில் ஒரு இசைக்கலைஞன் இல்லை என பதிவிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் சந்தோஷத்தை உண்டாக்கி உள்ளது.

அன்னக்கிளி படத்தில் ஆரம்பித்து 7 ஆயிரம் பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளார் இளையராஜா. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கச்சேரிகளையும் நடத்தி இத்தனை ஆண்டுகள் இசை வெள்ளத்தில் ரசிகர்களை நனைய வைத்தவர் இளையராஜா.

Also read: முன்னேறிய சிறகடிக்க ஆசை… எகிறும் விஜய் டிவி தொடர்கள்… இந்த வார டிஆர்பி அப்டேட்

81 வயதிலும் புதிதாக சாதனைகளைப் படைக்க வேண்டும் என இளையராஜா காட்டும் ஆர்வமும், உழைப்பும் ஆச்சரியப்பட வைக்கிறது. புதிய படங்களுக்கு அவர் கொடுத்து வரும் தன்னிகரற்ற இசை ரசிகர்களைக் கொண்டாட வைக்கிறது.

தற்போது வெளிநாடுகளில் சென்று இசைக்கச்சேரி நடத்தும் இளையராஜா தனக்கான ட்ரம்பைத் தானே வாசித்துக் கொள்கிறேன் என்றாலும் அது சுகமான அனுபவம் தான் என்று பதிவிட்டுள்ளார். தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்கிறேன் என்றால் நல்லா தான் இருக்கும் என்கிறார் இளையராஜா.

ilaiyaraja25
ilaiyaraja25

100 ஆண்டு இந்திய சினிமாவில் எழுத்து வடிவில் இசையை எழுதக்கூடிய ஒரே கலைஞன் இளையராஜா தான். தன்னைப் பற்றிய குறிப்புகளை டுவிட்டர் பக்கத்தில் தானே கார்டு வடிவில் போட்டு பிரபலப்படுத்தியுள்ளார். அதில் உலகிலேயே நான் தான் யுனைட்டடு கிங்டமில் சிம்பொனி இசையில் நம்பர் ஒன்னாக சாதனை படைத்துள்ளேன். இந்த இசை ஜனவரி 26, 2025ல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவின் இசையில் சமீபத்தில் வெளியான விடுதலை 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அத்தனை பாடல்களுமே மாஸாகத் தான் உள்ளது. ‘தினம் தினமும்’ என்ற மெலடி பாடல் கேட்க கேட்க இனிமையாக உள்ளது. மனசுல, பொறுத்தது போதும், இருட்டு காட்டுல ஆகிய பாடல்களும் சூப்பராக உள்ளது.

Also read: விடாமுயற்சிக்கும் ஹாலிவுட் படத்துக்கும் இவ்ளோ ஒற்றுமையா? அப்படியே சுட்டுருக்காங்களே..!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் வரும் டிசம்பர் 20ல் வெளியாகிறது. முதல் பாகத்திற்கும் இளையராஜா தான் இசை அமைத்தார். ‘வழி நெடுக’ என்ற மெலடி காதல் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. காட்டு மல்லி பாடலும் ரம்மியமான இசையைத் தந்தது. சூரி கதாநாயகனாக நடித்த முதல் படம். 2ம் பாகத்திலும் அதே போல இனிய பாடல்களை 81 வயதிலும் இளையராஜா தந்து அசத்தியுள்ளார்.

sankaran v

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.