விடாமுயற்சிக்கும் ஹாலிவுட் படத்துக்கும் இவ்ளோ ஒற்றுமையா? அப்படியே சுட்டுருக்காங்களே..!
மகிழ்திருமேனியின் இயக்கத்தில் அஜீத் நடித்த விடாமுயற்சி படத்தின் டீசர் நேற்று இரவு 11.08 மணிக்கு வெளியானது. படத்தில் ஹாலிவுட் தரத்தில் ஆக்ஷன் காட்சிகள் உள்ளதாகப் பேசப்பட்டன. இதுல என்ன வேடிக்கை என்றால் படமே ஹாலிவுட்டைப் பார்த்து அடித்த காப்பி தானே. அப்புறம் அப்படித்தானே இருக்கும் என்கின்றனர் ரசிகர்கள். வாங்க என்னன்னு பார்ப்போம்.
கார் பிரேக் டவுன் ஆகிறது. அந்த நேரத்தில் ஹீரோ கர்ட் ரசலின் மனைவி காணாமல் போகிறாள். விடாமுயற்சியுடன் தேடுகிறார். கடைசியில் கண்டுபிடித்தாரா என்பது தான் கதை. இதே கதை தான் விடாமுயற்சி படத்திலும் என்கின்றனர் ரசிகர்கள்.
அதாவது படத்தில் ஆரவ் தான் வில்லன். அஜீத்தை ஒரு கட்டத்தில் கட்டி வைத்து சித்ரவதை செய்கிறார். அதன்பின் அஜீத் ஆரவை அடித்து உதைத்துக் கட்டிப் போடுகிறார். பின்பு தன் மனைவி எங்கே என்று தேடுகிறார். அப்போது தான் கார் விபத்து நடைபெறுகிறது. அப்படியே இது அந்த ஹாலிவுட் படத்தின் கதையுடன் நச் சென்று பொருந்துகிறது என்கிறார்கள்.
Also read: பொண்ணு மாப்பிள்ளை ஜோரு!.. ஹல்தியுடன் தொடங்கிய சடங்கு!.. வைரலாகும் சைதன்யா-சோபிதா போட்டோஸ்..
அந்தப் படத்திலும் ஹீரோ அஜீத் மாதிரி ஸ்டைலாக இருக்கிறார். அஜர்பைஜானில் உள்ள இடத்தைப் போலவே லொகேஷன் உள்ளது. கார் வேகமாகப் போகிறது. காரை ஓட்டுபவர் அடித்துச் சித்ரவதை செய்கிறார்.
பிரேக் டவுன் என்ற அந்த ஹாலிவுட் படம் 1997ல் வெளியாகி உள்ளது. கர்ட் ரசல், ஜேடி.வால்ஷ், கத்லீன், கெய்னி உள்பட பலர் நடித்துள்ளனர். ஐஎம்டிபியில் 10க்கு 7 ரேட்டிங்கில் உள்ளது. அப்பவே ஆக்ஷன் த்ரில்லரில் வெறித்தனமாக இருந்தது.
விடாமுயற்சியில் திரிஷாவுடன் காரில் அஜீத் போகிறார். கார் பிரேக் டவுன் ஆகி விடுகிறது. மெக்கானிக்கைக் கூப்பிடப் போகும்போது மனைவி காணாமல் போகிறாள்.. விடாமுயற்சி படத்துல வர்ற டீசரும், பிரேக் டவுன் படத்துல வர்ற டீசரும் பல இடங்களில் ஒத்துப் போகிறது. குறிப்பாக கார் சேஸிங் காட்சிகள் அப்படித்தான் உள்ளது.